ஒரே மாதிரி ஸ்நாக்ஸ் சாப்பிட்டு போர் அடிக்குதா.? வாங்க சூப்பரான 'மில்க் புட்டிங்' எப்படி செய்வது என்று பார்க்கலாம்.!
ஒரே மாதிரியான ஸ்நாக்ஸ் தினமும் குழந்தைகளுக்கு சமைத்துக் கொடுத்தால் அவர்களுக்கும் அதில் சலிப்பு தட்டிவிடும். எனவே சுவையான மற்றும் சத்து நிறைந்த ஒரு புதிய ஸ்நாக்ஸ் எப்படி செய்வது என்று பதிவில் பார்க்கலாம். இன்று நாம் செய்ய இருக்கும் ரெசிபி மில்க் புட்டிங்.
இந்த மில்க் புட்டிங் செய்வதற்கு அரை லிட்டர் பால், 60 கிராம் சோள மாவு, 20 கிராம் பால் பவுடர் மற்றும் 20 கிராம் சர்க்கரை எடுத்துக் கொள்ள வேண்டும். முதலில் ஒரு பாத்திரத்தில் பால், பால் பவுடர், சோள மாவு மற்றும் சீனி ஆகியவற்றை நன்றாக கலந்த பின் அடுப்பை பற்ற வைத்து அதில் நான் ஸ்டிக் பாத்திரத்தை வைத்து நாம் கலந்து வைத்திருக்கும் கலவையை அவற்றில் ஊற்ற வேண்டும்.
அடுப்பை மிதமான சூட்டில் வைத்து அடி பிடிக்காத அளவிற்கு நன்றாக கிண்ட வேண்டும். இந்த ஆரம்பித்த மூன்று நிமிடத்தில் நன்றாக பசை போன்ற பதத்தில் வந்துவிடும். இப்போது அடுப்பை அணைத்து அதனை வேறொரு பாத்திரத்தில் மாற்றி ஆற வைக்க வேண்டும். அவற்றின் சூடு குறைந்ததும் ஒரு பாத்திரத்தில் சம அளவில் பரப்பி பிரிட்ஜில் இரண்டு மணி நேரம் வைத்து எடுத்த பின் தேங்காய் பூவில் பிரட்டி எடுத்தால் சுவையான மில்க் புட்டிங் ரெடி.