எண்ணெய் வழியும் முகம் பளிச்சிட.! இந்த ஹோம் மேட் ஃபேஸ் பேக் ட்ரை பண்ணி பாருங்க.!
ஆண்கள் மற்றும் பெண்கள் இருப்பாளாருக்கும் தங்கள் முகத்தை பளிச்சென்று வின்மையாக வைத்துக் கொள்ள வேண்டும் என்ற எண்ணமும் ஆசையும் எப்போதுமே இருக்கும். அதற்காக பியூட்டி பார்லர் மற்றும் சலூன் சென்று மேக்அப் செய்து கொள்வது அதிக செலவு வைக்கும் உண்டாகும். இதற்கு பதிலாக எளிமையாக வீட்டில் பயன்படுத்தும் பொருட்களைக் கொண்டே முகத்தை பளிச்சிட வைக்கும் ஒரு ஃபேஸ் பேக் எப்படி செய்யலாம் என்று பார்ப்போம்.
இது செய்வதற்கு பாதி எலுமிச்சை பழம் ஒரு வெள்ளரிக்காய் மற்றும் ஒரு ஸ்பூன் பச்சை பயிறு மாவு எடுத்துக் கொள்ள வேண்டும். முதலில் வெள்ளரிக்காய் தோல் நீக்கி அதை சிறு சிறு துண்டுகளாக வெட்டிக் கொள்ளவும். அதோடு பச்சை பயறு மாவு ஒரு டீஸ்பூன் கலந்து அவற்றில் எலுமிச்சை சாறு பிழிந்து விடவும். இவற்றை நன்றாக மிக்ஸ் செய்து முகத்தில் அப்ளை செய்யவும்.
முகத்தில் அப்ளை செய்ததற்குப் பின் இருபது நிமிடங்கள் கழித்து சுத்தமான காட்டன் துணியால் முகத்தை துடைத்துக் கொள்ள வேண்டும். பின்னர் தண்ணீரில் முகத்தை கழுவ வேண்டும். இந்த பேஸ் பேக்கை தொடர்ச்சியாக பயன்படுத்தி வர முகத்தில் இருக்கும் எண்ணெய் பசை நீங்கி முகம் நன்கு பொலிவுடன் மாறும். இது அனைத்தும் இயற்கை பொருட்களைக் கொண்டே செய்வதால் எந்தவித பக்க விளைவுகளும் இல்லை.