வாழைப்பழ ஃபேஸ் மாஸ்க்: குளிர்காலத்தில் முகம் வறட்சியாக இருக்கிறதா.? உங்கள் முகம் பளிச்சிட ஒரு வாழைப்பழம் போதும்.!
குளிர்காலத்தில் உங்கள் சருமம் இரண்டு போகும். தெற்கு காற்றில் ஈரப்பதம் குறைவாக இருப்பதும் நமது உடலில் போதுமான நீர்ச்சத்து இல்லாததுமே காரணம். அதிகமாக நீர் குடிப்பதன் மூலம் உடலை நீரேற்றத்துடன் வைத்திருக்க முடியும். எனினும் வறண்ட காற்று நம் முகத்தில் படும்போது முகம் வறட்சி அடைவதை தடுக்க முடியாது. இந்த பாதிப்பை எளிதில் சரி செய்ய வாழைப்பழம் மற்றும் பாதாம் எண்ணையை பயன்படுத்தி ஃபேஸ் மாஸ்க் செய்து பயன்படுத்தலாம். இதனால் சருமத்தின் வளர்ச்சி நீங்கி பளபளப்புடன் மின்னும்.
இந்த ஃபேஸ் மாஸ்க் செய்வதற்கு ஒரு வாழைப்பழம் மற்றும் ஒரு டீஸ்பூன் பாதாம் எண்ணெய் எடுத்துக் கொள்ள வேண்டும். வாழைப்பழத்தை முதலில் நன்றாக மசித்து அதில் ஒரு டீஸ்பூன் பாதாம் எண்ணெயை ஊற்றி இரண்டையும் நன்றாக கலக்க வேண்டும். பேஸ்ட் பதத்தில் வந்ததும் இந்தக் கலவையை எடுத்து முகத்தில் தடவி மிருதுவாக மசாஜ் செய்து 15 நிமிடங்கள் முகத்தில் அப்படியே வைத்திருக்க வேண்டும். பின்னர் ஒரு காட்டன் துணியால் முகத்தை நன்றாக துடைத்து விட்டு நீரில் முகத்தை கழுவ வேண்டும்.
இதனை ஏழு நாட்கள் செய்து வர குளிர்காலத்தால் முகத்தில் ஏற்படும் சரும வளர்ச்சி நீங்கி முகம் நன்றாக பளபளக்கும். வாழைப்பழத்தில் இருக்கும் வைட்டமின்கள் நீர்ச்சத்து மற்றும் பாதாம் எண்ணில் இருக்கும் ஒமேகா 3 அமினோ அமிலங்கள் மற்றும் ஆன்டி ஆக்ஸிடென்ட்கள் நம் சருமத்தில் இருக்கும் வளர்ச்சியை போக்க உதவுகின்றன. இவற்றை தொடர்ந்து பயன்படுத்தி வருவதால் முகம் பொலிவுடன் தோன்றுவதோடு வளர்ச்சியும் நீங்குகிறது. மேலும் முகப்பருக்கள் வராமலும் இது தடுக்கிறது.