நீரிழிவு நோயால் கஷ்டப்படுகிறீர்களா.? கவலை வேண்டாம் இந்த விதைகளை முயற்சி செய்து பாருங்கள்.!
இன்று மனிதர்களை அச்சுறுத்துவதில் மிகப்பெரிய வியாதியாக இருப்பது சர்க்கரை நோய். பெரியவர்கள் முதல் சிறியவர்கள் வரை அனைத்து வைத்திருக்கும் சர்க்கரை நோய் மிகப் பெரிய பாதிப்பை ஏற்படுத்தியிருக்கிறது. இவற்றிற்கும் உணவு கட்டுப்பாட்டிற்கும் நெருங்கிய தொடர்பு உண்டு. மருந்து மாத்திரைகளை மட்டுமே எடுத்துக் கொள்ளாமல் சில விதைகளின் மூலமும் சர்க்கரை நோயை கட்டுப்படுத்தலாம் என கூறுகிறது ஆயுர்வேத மருத்துவம். அப்படி சர்க்கரை நோயை கட்டுப்படுத்தக்கூடிய சில விதைகளை பற்றி இந்த பதிவில் பார்ப்போம்.
சர்க்கரை நோயாளிகளுக்கு சிறந்த பழமாக நாவல் பழம் வழங்குகிறது. இந்த பழத்தின் விதைகளும் நீரிழிவு நோயினை கட்டுப்படுத்துவதில் முக்கிய பங்கு வகிக்கிறது. இவற்றின் விதைகளில் ஆக்ஸிஜனேற்ற மூலக்கூறுகள் இரும்புச்சத்து பொட்டாசியம் மற்றும் பக்னீசியம் நிறைந்து இருக்கின்றன. மேலும் இவற்றில் இருக்கக்கூடிய ஆந்தோசயனீன்கள் மற்றும் எலாஜிக் ஆசிட் போன்றவை ரத்தத்தில் சர்க்கரையை விரைவாக உறிஞ்சும் தன்மையை கட்டுப்படுத்துகிறது. இதனால் ரத்தத்தில் உறிஞ்சப்படும் சர்க்கரையின் அளவு குறைகிறது. நீரிழிவு நோய் கட்டுக்குள் இருக்கிறது. நாவல் பழத்தின் விதைகளை காய வைத்து பொடி செய்து சூடான நீரில் கலந்து பருகிவர நீரிழிவு நோயாளிகளுக்கு சர்க்கரை நோய் கட்டுப்படும்.
சியா விதைகளும் நீரிழிவு நோயாளிகளுக்கு ஒரு சிறந்த மருந்தாகும். இந்த விதைகளில் இன்சுலின் உணர் திறனை மேம்படுத்துவதற்கான மூலக்கூறுகள் இருப்பதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன. எனவே இந்த விதைகளை நீரில் ஊறவைத்து குடிப்பதன் மூலம் சர்க்கரை நோயை கட்டுப்படுத்த முடியும். சப்ஜா விதைகளும் நீரிழிவு நோயாளிகளுக்கு ஒரு சிறந்த மருந்தாக இருக்கிறது. சப்ஜா விதைகளில் நார்ச்சத்து அதிகமாக இருக்கிறது. இவை உடல் எடையை கட்டுப்படுத்த உதவுவதோடு நீரிழிவு நோய்க்கும் சிறந்த மருந்தாக செயல்படுகிறது. இவற்றை நீரில் ஊற வைத்து சாப்பிடும் போது ரத்தத்தில் சர்க்கரையின் அளவு உயர்வதை கட்டுப்படுத்துகிறது. இவை தவிர வெந்தய விதை மற்றும் பூசணி விதைகளும் சர்க்கரை நோயாளிகளுக்கு சிறந்த இயற்கை மருந்தாகும்.