முகம் பளபளப்பாக… எலுமிச்சை சாறுடன் இந்த பொருளை கலந்து பயன்படுத்தி பாருங்க.!
ஒவ்வொருவருக்கும் தங்களது சருமம் மற்றும் முக அழகை பொலிவுடன் வைக்க வேண்டும் என்று எண்ணம் இருக்கும். அதற்காக அழகு நிலையம் சென்று நம் பணத்தை செலவு செய்கிறோம். எளிமையாக நம் வீட்டில் இருக்கும் பொருட்களைக் கொண்டே நம் முக அழகை பொலிவுடனும் பளபளப்பாக வைத்திருக்க உதவும் சில அழகு குறிப்புகளை பார்ப்போம்.
நாம் உணவாக பயன்படுத்தப்படும் எலுமிச்சை பல வைட்டமின்களையும் மினரல்களையும் கொண்டிருக்கிறது. இது நம் உடலுக்கு பல நன்மைகளை தருவதோடு சரும அழகிலும் முக்கிய பங்கு வகிக்கிறது . எலுமிச்சை பழத்தில் வைட்டமின் ஏ,இ,சி அதிக அளவில் நிறைந்து இருக்கிறது. மேலும் இதில் கால்சியம் பொட்டாசியம் பாஸ்பரஸ் மக்னீசியம் போன்ற தாதுக்களும் அதிக அளவில் நீர்ச்சத்தும் நிறைந்திருக்கிறது.
இந்த எலுமிச்சம் பழச்சாறை எடுத்து அதனுடன் சர்க்கரை கலந்து பயன்படுத்தும் போது நமது முக அழகிற்கு பல்வேறு வகையான நன்மைகள் கிடைக்கின்றன. மேலும் இதில் இருக்கக்கூடிய பாக்டீரியா எதிர்ப்பு பண்பு முகப்பரு போன்றவை வராமல் தடுக்கிறது. எலுமிச்சம் பழத்தில் இருக்கக்கூடிய நீர்ச்சத்து சருமம் உலராமல் எப்போதும் புத்துணர்ச்சியுடன் இருக்க உதவுகிறது.
முகத்தில் இருக்கும் கருமையை போக்குவதற்கு நம் சமையல் அறையில் இருக்கும் எலுமிச்சை பழ சாறுடன் சர்க்கரையை சேர்த்து பயன்படுத்தும் போது நல்ல பலன் கிடைக்கும். எலுமிச்சை பழச்சாறில் சர்க்கரை கலந்து அதை கருமை உள்ள இடங்களில் தொடர்ந்து தேய்த்து வர கருமை நீங்கி முகம் புது பொலிவுடன் ஜொலிக்கும்.