'பொன் கிடைத்தாலும் புதன் கிடைக்காது' புதன்கிழமை எந்த தெய்வத்தை, எப்படி வழிபட வேண்டும் ?
பொன் கிடைத்தாலும் புதன் கிடைக்காது என்பது பழமொழி. புதன்கிழமை வழிபாடு மிகவும் சிறப்பான பலன்களை தரும் என்பது நம்பிக்கை. ஒவ்வொரு வாரமும் புதன் கிழமைகளில் புதன் பகவானுக்கான ஆயில்யம், கேட்டை, ரேவதி நட்சத்திர நாட்களில் வீட்டில் விளக்கேற்றி வழிபட்டு வந்தால் தொழில் போட்டிகள் நீங்கி சிறப்பாக இருக்கும் என்பது ஐதீகம். இத்தகைய சிறப்பு வாய்ந்த நாள் புதன் கிழமை. இந்த நாளில் எந்த தெய்வத்தை வழிபடலாம் என்பது குறித்து இந்த பதிவில் பார்க்கலாம்.
புதன்கிழமை மகாவிஷ்ணுவிற்கு உகந்த நாள். புதன்கிழமையில் பெருமாள் கோவிலுக்கு சென்று, புதன் பகவானுக்குரிய தானியமான பச்சை பயறு வாங்கிக் கொடுப்பதால் ஜாதகத்தில் புதன் பகவானின் பலம் அதிகரிக்கும். புதன்கிழமை மகாலட்சுமியை வழிபட்டால் செல்வம், செழிப்பு பெருகும். புதன் கிரகம் கல்விக்கு காரகம் என்பதால், புதன்கிழமை குழந்தைகளின் கல்வி மேம்பாட்டிற்காக வழிபாடு செய்யலாம். திருமண தடை உள்ளவர்கள் புதன்கிழமை வழிபாடு செய்தால் விரைவில் திருமணம் நடக்கும்.
சந்தான பாக்கியம் இல்லாதவர்கள் புதன்கிழமை வழிபாடு செய்தால் குழந்தைப்பேறு கிடைக்கும். புதன்கிழமை, விநாயகப் பெருமானுக்கும் ஏற்ற கிழமை என்பதால் விநாயகரை வழிபட்டால் தடைகள் நீங்கும். ஆயில்யம், கேட்டை, ரேவதி நட்சத்திரக்காரர்களுக்கு புதன்கிழமை வழிபாடு மிகவும் நல்ல பலனைத் தரும். புதன்கிழமை அசைவ சாப்பிடுவதை தவிர்த்தல் சிறப்பானதாகும்.
Read more ; கருப்பு எறும்பு முதல் தவளை வரை.. வாஸ்து படி இவையெல்லாம் வீட்டிற்குள் வந்தால் அதிர்ஷ்டமாம்..!!