டாலர் புறக்கணிப்பா? இந்தியா உட்பட பிரிக்ஸ் நாடுகளுக்கு மிரட்டல் விடுத்த டிரம்ப்..!!
டாலரை புறக்கணிக்கும் நாடுகள் மீது 100 சதவீத வரி விதிக்கப்படும் என உறுப்பு நாடுகளுக்கு அமெரிக்க அதிபராக பதவி ஏற்க உள்ள டொனால்ட் டிரம்ப் எச்சரித்து உள்ளார்.
பிரேசில், ரஷ்யா, இந்தியா, சீனா, தென்னாப்பிரிக்கா ஆகிய நாடுகளை கொண்ட வலுவான கூட்டமைப்புதான் பிரிக்ஸ். இந்த பிரிக்ஸ் நாடுகளின் கூட்டமைப்பு வருடா வருடம் நடப்பது வழக்கம். இவர்களின் கடந்த கூட்டத்தில் பிரிக்ஸ் நாடுகள் எல்லாம் இனி பிரிக்ஸ் குழுவின் புதிய கரன்சியை பயன்படுத்துவது பற்றி ஆலோசிக்கப்பட்டது. இதில் கவனிக்க வேண்டியது எண்ணெய் வள நாடுகள் இப்போது டாலரை பயன்படுத்துகின்றன. பிரிக்ஸ் கரன்சி குழுவில் அவை சேருவதால் அவையும் டாலரை துறந்துவிட்டு பிரிக்ஸ் கரன்சிக்கு மாறும்.
இது அமெரிக்க டாலரின் வீழ்ச்சியாக பார்க்கப்படும். இதனால் உலக அரசியலே மாறும். எண்ணெய் பொருட்கள் டாலருக்கு பதிலாக பிரிக்ஸ் கரன்சியில் வாங்கப்படும். இப்படிப்பட்ட நிலையில்தான் சீனாவும் ரஷ்யாவும் தங்களுக்கு இடையிலான இருதரப்பு வர்த்தகத்தில் அமெரிக்க டாலரை பயன்படுத்துவதை முற்றிலுமாக நிறுத்திவிட்டனர். இதனால் அமெரிக்காவின் பொருளாதார வளர்ச்சி பெருமளவு பாதிக்கப்படும் என கூறப்படுகிறது.
அமெரிக்காவின் புதிய அதிபராக உள்ளபதவி ஏற்க உள்ள டொனால்ட் டிரம்ப் நாட்டின் வளர்ச்சிக்காக பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார். இந்த நிலையில் டாலரை புறக்கணிக்கும் நாடுகள் மீது 100 சதவீத வரி விதிக்கப்படும் என டொனால்ட் டிரம்ப் எச்சரித்து உள்ளார். இதுதொடர்பாக அவர் கூறுகையில், டாலரை நிராகரித்தால் அமெரிக்காவில் பொருள்களை விற்பனை செய்ய சில நாடுகள் குட்-பை சொல்ல வேண்டி இருக்கும் என கூறினார்.
இதனால் ரஷ்யா, இந்தியா, சீனா, வட ஆப்ரிக்கா உள்ளிட்ட பிரிக்ஸ் கூட்டமைப்பு நாடுகள் அதிர்ச்சி அடைந்துள்ளன. அமெரிக்கா தனது பொருள்களுக்கு 100 சதவீதம் வரி விதித்தால் உலக பொருளாதாரமே முடங்கி விடும் என நிபுணர்கள் கூறுகின்றனா். டொனால்ட் டிரம்பின் எச்சரிக்கை இந்தியா பொருளாதாரத்தை மிகவும் பாதிக்கும் என கூறப்படுகிறது. இதற்கு காரணம் இந்தியா போன்ற உலக நாடுகள் டாலர் மதிப்பில் கச்சா எண்ணெய், அன்னிய முதலீடு ஆகியவற்றை பெறுகின்றது தான் ஆகும்.
Read more ; மன அழுத்தம் முதல் சளி நிவாரணம் வரை.. உள்ளங்கைகளை தேய்ப்பதில் இவ்ளோ ஆரோக்கிய நன்மைகள் இருக்கா?