'எனக்கு பரஸ்பரம் தான் முக்கியம்' எங்களுக்கே வரியா..? இனி அமெரிக்காவும் இந்தியாவுக்கு வரி விதிக்கும்..!! - எச்சரிக்கை விடுத்த டிரம்ப்
அமெரிக்கப் பொருட்களுக்கு அதிக வரி விதிக்கும் இந்தியா உள்ளிட்ட நாடுகள் மீது பரஸ்பர வரிகளை விதிக்கும் தனது திட்டத்தை அமெரிக்க அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள டொனால்ட் டிரம்ப் தெரிவித்துள்ளார். திங்களன்று செய்தியாளர்களிடம் பேசிய டிரம்ப், மற்ற நாடுகள் அமெரிக்க தயாரிப்புகளுக்கு வரி விதித்தால், அமெரிக்கா அதற்கு பதிலளிக்கும் என்று வலியுறுத்தினார்.
செய்தியாளர்களிடம் பேசிய டிரம்ப், அமெரிக்க பொருட்களின் இறக்குமதி மீது இந்திய அரசு விதித்துள்ள அதிக சுங்க வரிக்கு பதிலடி கொடுக்கும் வகையில், பரஸ்பர வரி விதிக்கப்படும். எல்லா சந்தர்ப்பங்களிலும், அவர்கள் எங்களுக்கு வரி விதிக்கிறார்கள், நாங்கள் அவர்களுக்கு வரி விதிக்கவில்லை. இனி அவர்கள் எங்களுக்கு வரி விதித்தால், நாங்கள் அவர்களுக்கு அதே அளவு வரி விதிக்கிறோம்.
சீனாவுடனான வர்த்தக உடன்படிக்கை தொடர்பான கேள்விக்கு பதிலளிக்கும் போதே டொனால்ட் டிரம்ப் இதனைத் தெரிவித்தார். குறிப்பாக இந்தியா மற்றும் பிரேசிலை சுட்டிக்காட்டினார், சில அமெரிக்க தயாரிப்புகளுக்கு அதிக வரி விதிக்கும் நாடுகளில் இவையும் அடங்கும் என்று கூறினார். அமெரிக்க பொருட்களுக்கு இந்தியா 100% வரி விதித்தால், அதற்கு ஈடாக அமெரிக்காவும் அதையே செய்யும் என்று குறிப்பிட்டார்.
எனக்கு பரஸ்பரம் என்ற சொல் முக்கியமானது, ஏனென்றால் யாரேனும் நம்மீது வரி விதித்தால், நாம் அவர்களுக்கு வரி விதிக்க வேண்டியதில்லையா? இந்தியா எங்களிடம் 100 சதவீதம் கட்டணம் வசூலித்தால், அதற்கு நாங்கள் எதுவும் வசூலிக்க வேண்டாமா? அவர்கள் ஒரு சைக்கிளை அனுப்புகிறார்கள், நாங்களும் அவர்களுக்கு ஒரு சைக்கிளை அனுப்புகிறோம். எங்களிடம் 100 மற்றும் 200% வரி வசூலிக்கிறார்கள். அதன்படி, இந்தியாவும், பிரேசிலும் அதிக கட்டணம் வசூலிக்கிறது. அவர்கள் எங்களிடம் கட்டணம் வசூலிக்க விரும்பினால், அது பரவாயில்லை. ஆனால், இனி நாங்களும் அவர்களிடம் அதே கட்டணத்தை வசூலிக்கப் போகிறோம்” என ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக விளக்கம் அளித்த டிரம்பின் வர்த்தக செயலாளர் ஹோவர்ட் லுட்னிக், பரஸ்பரம் என்பது டிரம்ப் நிர்வாகத்திற்கு ஒரு முக்கிய தலைப்பாக இருக்கும் என்றார். மேலும், நீங்கள் எங்களை எப்படி நடத்துகிறீர்கள் என்பதை பொறுத்து தான், உங்களிடம் நாங்கள் நடந்துகொள்வது இருக்கும் என்றும் விளக்கமளித்துள்ளார்.
Read more ; கலைஞர் கனவு இல்லம் : கூடுதலாக ரூ.400 கோடி ஒதுக்கீடு செய்த தமிழக அரசு..!!