For the best experience, open
https://m.1newsnation.com
on your mobile browser.
Advertisement

EPFO கணக்கில் இருந்து பணம் எடுப்பதில் சிக்கலா..? நிறுவனம் மாறும்போது இந்த தவறை மட்டும் பண்ணாதீங்க..!!

08:17 AM Mar 26, 2024 IST | Chella
epfo கணக்கில் இருந்து பணம் எடுப்பதில் சிக்கலா    நிறுவனம் மாறும்போது இந்த தவறை மட்டும் பண்ணாதீங்க
Advertisement

சிலர் அடிக்கடி நிறுவனம் மாறுவார்கள். அப்படி விலகி கையோடு உடனே, அந்த நிறுவனத்தின் பிஎப் கணக்கில் உள்ள பணத்தை தற்போது வேலை செய்யும் நிறுவனத்திற்கு மாற்றுவது நல்லது.

Advertisement

EPFO (தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி) என்று ஆங்கிலத்தில் அழைக்கப்படும் பிஎப் பணம் சேமிப்பு என்பது மாதச் சம்பளம் வாங்குவோரின் முக்கியமான இரும்பு பெட்டியாகும். கஷ்டம் வரும் போது, அதாவது யாருமே கை கொடுக்காத நிலையில், எல்லா சூழ்நிலைகளும் நமக்கு எதிராகவும் இருந்தால், அப்போது கண்ணை மூடிவிட்டு பிஎப் கணக்கை திறந்து பார்த்தால் நிச்சயம் நமக்கு கைகொடுக்கும்.

பிஎப் எனப்படும் EPFO அக்கவுண்டில் ஒரு UAN நம்பர் தான் ஒருவருக்கு இருக்கும். ஆனால், எத்தனை பிஎப் கணக்கு வேண்டுமானாலும் தொடங்கலாம். நீங்கள் கடைசியாக பணியாற்றும் நிறுவனத்திற்கு ஒரு பிஎப் கணக்கு, அதற்கு முந்தைய நிறுவனங்கள் ஒவ்வொன்றுக்கும் ஒரு பிஎப் கணக்கு இருக்கும். அடிக்கடி நிறுவனம் மாறுவோர், முடிந்த வரை அப்படி செய்வதை தவிர்ப்பது நல்லது. அப்படி மீறி மாறித்தான் ஆக வேண்டும் என்றால், கண்டிப்பாக முறைப்படி வெளியேற வேண்டும்.

ஒரு நிறுவனத்தில் இருந்து இன்னொரு நிறுவனத்திற்கு மாறுகிறீர்கள் என்றால், அங்கு உங்கள் பிஎப் கணக்கு தொடங்கிய தேதியையும் (வேலையில் சேர்ந்த தேதி), நீங்கள் வேலையைவிட்டு நின்ற தேதியையும் (பிஎப் கணக்கு நிறைவுநாள்) அந்த குறிப்பிட்ட பிஎப் கணக்கில் அந்த நிறுவனத்தின் ஹெச்ஆர் குறிப்பிட்ட வேண்டும். முறைப்படி வெளியேறினால் தான் அதனை பிஎப் கணக்கில் தனியார் நிறுவனங்கள் குறிப்பிடும்.

அப்படி குறிப்பிட்டால் மட்டுமே இப்போது நீங்கள் வேலை செய்யும் நிறுவனத்தின் பிஎப் கணக்கு பணத்தை மாற்ற முடியும். பிஎப் கணக்கை வேலையைவிட்டு நின்ற உடனேயே மாற்றி விடாவிட்டால், பின்னாளில் சிக்கல் வரும். எனவே பழைய பிஎப் கணக்கில் உள்ள பணத்தை கையோடு புதிய நிறுவனத்தின் பிஎப் கணக்கிற்கு மாற்றுவதற்கு பிஎப் இணையதளத்தில் விண்ணப்பியுங்கள். ஒரு வேளை அதற்கு விண்ணப்பிக்க முடியவில்லை என்றால், பழைய நிறுவனம் நீங்கள் வேலையைவிட்டு நின்றதை குறிப்பிடாமல் விட்டுள்ளது என்று அர்த்தம்.

அதை கவனித்து மாற்றி விடுங்கள். அப்படி நீங்கள் வேலையை விட்டு நின்ற அத்தனை நிறுவனங்களிலும் மாறி ஒரே நிறுவனத்திற்கு பணத்தை மாற்றி வைத்துக்கொள்ளுங்கள். அப்படி மாற்றி வைத்துக்கொண்டால் எப்போது வேண்டுமானாலும் பிஎப் கணக்கில் பணம் அட்வான்ஸ் எடுக்க முடியும். ஒருவேளை மொத்தமாக வேலையை விட்டு நின்றாலும் பணத்தை எடுத்துக் கொள்ள முடியும்.

Read More : மத்திய அரசு ஊழியர்களுக்கு ஜாக்பாட்..!! ஏராளமான பலன்கள் அறிவிப்பு..!! செம சர்ப்ரைஸ் காத்திருக்கு..!!

Advertisement