’என்னை கலங்கப்படுத்திட்டீங்க’..!! ’வெளியே வந்து நிரூபிக்கிறேன்’..!! கதறி அழுத கல்யாண ராணி சத்யா..!!
திருப்பூர் மாவட்டம் தாராபுரத்தை சேர்ந்த 29 வயதான நபர் ஒருவர், மாட்டு தீவன விற்பனை நிலையம் நடத்தி வருகிறார். இவருக்கு கடந்த 5 மாதங்களுக்கு முன்பு மெட்ரிமோனி செயலி ஒன்று மூலம் ஈரோடு மாவட்டம் கொடுமுடியை சேர்ந்த சந்தியா என்கின்ற சத்யா (30) என்பவர் அறிமுகமாகியுள்ளார். இருவரும் தொடர்ந்து பேசி வந்துள்ளனர். மேலும், செல்போன் எண்களையும் பரிமாறி உள்ளனர். நாளடைவில் பல மாதங்கள் தொடர்ந்து இவர்கள் பேசியதால் இருவரும் காதலித்துள்ளனர்.
இதற்கிடையே, சத்யாவின் உறவினர் என தமிழ்ச்செல்வி என்பவரும் அறிமுகமாகி உள்ளார். பின்னர் மகேஷ் அரவிந்த் மற்றும் சத்யா ஆகியோர் சந்தித்து வந்துள்ளனர். இதற்கிடையே, தமிழ்செல்வி மற்றும் சத்யா இருவரும் சேர்ந்து அடிக்கடி அந்த நபரிடம் பல்வேறு காரணங்களை கூறி பணம் பெற்று வந்துள்ளனர். அவரும் கொடுத்து வந்துள்ளார். இந்நிலையில், இருவரும் திருமணம் செய்து கொள்ள முடிவு செய்தனர். அதன்படி, கடந்த ஜூன் 21ஆம் தேதி, இருவருக்கும் தமிழ்ச்செல்வி திருமணம் செய்து வைத்துள்ளார்.
பின்னர், அந்த நபரின் உறவினர்கள் தாலிக்கொடி உள்பட 12 பவுன் நகை சத்யாவுக்கு எடுத்துக் கொடுத்துள்ளனர். இதைத் தொடர்ந்து, சத்யா அடிக்கடி பல ஆண்களுடன் செல்போனில் பேசியதாக தெரிகிறது. இதனால் அவரது நடவடிக்கையில் சந்தேகம் ஏற்பட்டதால், அந்த நபர் செல்போனை ஆய்வு செய்தபோது, அதில் ஆண்கள் சிலருடன் நெருக்கமாக இருந்த புகைப்படங்களை பார்த்துள்ளார். இது குறித்து கேட்டபோது, இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இதனால் சத்யா திடீரென வீட்டிலிருந்து மாயமாகியுள்ளார்.
இதனால் அதிர்ச்சியடைந்த கணவர், இதுகுறித்து தாராபுரம் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் ஒரு புகார் கொடுத்தார். அந்த புகாரில் சத்யா தன்னை திருமணம் செய்து ரூ.50 ஆயிரம் மற்றும் 12 பவுன் நகைகளை மோசடி செய்ததாகவும், பலபேரை இதுபோல் ஏமாற்றி திருமணம் செய்ததாகவும், அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டுமென கூறியிருந்தார். இதுதொடர்பாக விசாரணை நடத்திய தனிப்படை போலீசார், புதுச்சேரியில் பதுங்கி இருந்த சத்யாவை நேற்று முன்தினம் பிடித்து, தாராபுரம் அழைத்து வந்தனர்.
இதனைத்தொடர்ந்து நேற்று (ஜூலை 14) மதியம் சத்யா கைது செய்யப்பட்டார். சத்யா 5-க்கும் மேற்பட்டவர்களை திருமணம் செய்து மோசடி செய்ததாக பல்வேறு தகவல்கள் பரவி வருகிறது. இதுதொடர்பாக போலீசார் கைது செய்து தாராபுரம் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி திருப்பூர் சிறையில் அடைத்தனர். நீண்ட நாட்களாக தேடி வந்த சத்யா போலீசார் கைது செய்தனர். கைது செய்து சத்யாவை போலீசார் காவல் நிலையம் அழைத்துச் சென்றபோது ஊடகத்தை நோக்கி சத்யா பேசுகையில், "நான் வெளியே வந்து, அனைத்து ஆதாரங்களையும் காண்பித்து, உங்களுக்கு விளக்கம் கொடுக்கிறேன். தயவுசெய்து எனது குடும்பத்தை அசிங்கப்படுத்த வேண்டாம். என்னை மிகவும் கலங்கப்படுத்திவிட்டீர்கள். எனது தாயார் தற்கொலை செய்துகொண்டார் என்ற அளவிற்கு பேசியுள்ளீர்கள். இதற்கு மேல் என்னை யாரும் அசிங்கப்படுத்த முடியாது. காசு இருப்பவர்களால் எதை வேண்டுமானாலும் செய்ய முடியும் என்பதை எல்லோரும் காண்பித்துவிட்டீர்கள்" என்று கண்ணீர்விட்டு அழுதார்.
Read More : ”ரேஷன் கடைகளில் இனி பாமாயில் கிடையாது”..!! ”மாற்று பொருள் இதுதான்”..!! அமைச்சர் சொன்ன குட் நியூஸ்..!!