மன்னிப்பு கேட்ட மன்சூருக்கு பதிலடி கொடுத்த த்ரிஷா..!! என்ன சொல்லியிருக்காரு தெரியுமா..?
நடிகர் மன்சூர் அலிகான் மன்னிப்பு கேட்டதை தொடர்ந்து தனது எக்ஸ் தளத்தில் நடிகை த்ரிஷா பதிலடி கொடுத்துள்ளார்.
நடிகை த்ரிஷா குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசியது தொடர்பாக நடிகர் மன்சூர் அலிகானுக்கு எதிராக பல்வேறு கண்டனங்கள் வலுத்தன. நடிகை த்ரிஷாவிடம் அவர் மன்னிப்பு கேட்டே ஆக வேண்டும் என்று கூறப்பட்ட நிலையில், மன்னிப்பு கேட்க முடியாது என்று தெரிவித்திருந்தார்.
மேலும், நான் அவ்வாறு தவறான அர்த்தத்தில் பேசவில்லை என்று மறுத்து வந்த மன்சூர் அலிகான் தற்போது த்ரிஷாவிடம் மன்னிப்பு கேட்டு அறிக்கை ஒன்றை வெளியிட்டிருந்தார். அதில், எனது சக திரைநாயகி த்ரிஷாவே என்னை மன்னித்துவிடு! இல்லறமாம் நல்லறத்தில் நின் மாங்கல்யம் தேங்காய் தட்டில் வலம்வரும்போது நான் ஆசிர்வதிக்கும் பாக்யத்தை இறைவன் தந்தருள்வானாக!! ஆமீன் என தெரிவித்திருந்தார்.
இந்நிலையில், நடிகை த்ரிஷா இதற்கு பதிலளிக்கும் வகையில், அவரது எக்ஸ் தளத்தில் இதுகுறித்து பதிவிட்டுள்ளார். அந்த பதிவில், "தவறு செய்வது மனிதம், மன்னிப்பவர் தெய்வம்" என்று குறிப்பிட்டுள்ளார்.