வெறும் ரூ.209-க்கு விண்வெளிக்கு பயணிக்கலாம்..!! மக்களே நீங்க ரெடியா..? அமெரிக்க நிறுவனம் சூப்பர் அறிவிப்பு..!!
மனிதர்களை விண்வெளிக்கு அனுப்பும் திட்டத்தில் இந்தியாவையும் இணைத்திருப்பதாக அமெரிக்காவை சேர்ந்த விண்வெளி ஆய்வு நிறுவனம் அறிவித்துள்ளது.
ப்ளூ ஒரிஜின் நிறுவனத்துடன் இணைந்து மனிதர்களை விண்வெளிக்கு அனுப்பும் திட்டத்தில், வெவ்வேறு நாடுகளை சேர்ந்த குடிமக்கள் விண்வெளிக்கு குறுகிய காலம் பயணம் மேற்கொள்ளும் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இத்திட்டத்தின் கீழ் இந்தியர்களும் இனி விண்வெளி சுற்றுலாப் பயணம் மேற்கொள்ளலாம். மொத்தம் 6 பேர் பயணிக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ள ப்ளூ ஒரிஜின் நிறுவனத்தின் ‘நியூ ஷெப்பர்டு’ விண்கலத்தில் இந்தியாவை சேர்ந்த ஒருவருக்கும் இருக்கை ஒதுக்கப்பட்டுள்ளது.
இது குறித்து அமெரிக்காவைச் சேர்ந்த விண்வெளி ஆய்வு நிறுவனமான செரா நிறுவனத்தின் சாம் ஹட்சின்சன் மற்றும் ஜோஷுவா ஸ்கர்லா ஆகியோர் கூறுகையில், ”இந்தியாவின் விண்வெளி ஆய்வு குறித்த உள்கட்டமைப்புகளையும், செயல்பாடுகளையும் மிகவும் விரும்புவதாக தெரிவித்துள்ளனர். ஒவ்வொருவரும் விண்வெளிக்கு பயணம் மேற்கொள்வதை சாத்தியமாக்கும் முன்னெடுப்பில் இறங்கியுள்ளோம். இந்த பொன்னான வாய்ப்பை, இந்திய குடிமக்களுக்கு வழங்குவதில் மகிழ்ச்சியடைகிறோம்” என்றனர்.
இந்த் திட்டத்தின்கீழ், பூமியில் இருந்து 100 கி.மீ. தூரத்தில் சர்வதேச நாடுகளால் வரையறுக்கப்பட்டுள்ள விண்வெளி எல்லைக் கோடான ’கர்மான் லைன்’ பகுதியில் சுமார் 11 நிமிடங்கள் பயணிக்கலாம். இதற்காக வெறும் ரூ. 209 (2.50 டாலர்) மட்டுமே பதிவுக் கட்டணமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. அதனைத் தொடர்ந்து பல்வேறு தெரிவு நடைமுறைகளுக்குப் பின்னரே, தகுதியான நபருக்கு இந்த வாய்ப்பு வழங்கப்படும் என ப்ளூ ஒரிஜின் நிறுவனம் தெரிவித்துள்ளது.
Read More : அரசியலில் இருந்து ஓய்வு பெறுகிறார் அண்ணாமலை..? அடுத்த தமிழக பாஜக தலைவர் இவர்தானாமே..!!