For the best experience, open
https://m.1newsnation.com
on your mobile browser.
Advertisement

மகளிருக்கு கட்டணமில்லா பயணச் சலுகையால் போக்குவரத்துத் துறை உயிர்பெற்றுள்ளது..!! - அமைச்சர் சிவசங்கர்

Transport Minister S.S. Sivasankar said that there will be no fare hike in government buses in Tamil Nadu for the time being.
10:26 AM Jul 12, 2024 IST | Mari Thangam
மகளிருக்கு கட்டணமில்லா பயணச் சலுகையால் போக்குவரத்துத் துறை உயிர்பெற்றுள்ளது       அமைச்சர் சிவசங்கர்
Advertisement

பெரம்பலூர் தனியார் பல்கலைக் கழக கூட்டரங்கில் நேற்று நடைபெற்ற விழாவில் போக்குவரத்துத் துறை அமைச்சர் சிவசங்கர் கலந்து கொண்டார். இந்த விழாவில் 2 ஆயிரம் பேருக்கு இலவச வீட்டு மனை பட்டாவை போக்குவரத்துத் துறை அமைச்சர் சிவசங்கர் வழங்கினார்.இதனைத் தொடர்ந்து, அமைச்சா் சிவசங்கர் செய்தியாளா்களை சந்தித்து பேசினார்.

Advertisement

அவர் பேசுகையில், ”அரசு விரைவுப் போக்குவரத்துக் கழகம் சார்பில் புதிதாகவாங்கப்பட்டுள்ள பேருந்துகளில், ஆம்னி பேருந்துகளில் உள்ளதைப்போல செல்போன் சார்ஜ் வசதி, படுக்கை வசதி உள்ளிட்ட வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. தேமுதிக பொதுச் செயலாளர் பிரேமலதா, அரசின் நிர்வாகம் தெரியாமல் பேசுகிறார். தற்போது 600-க்கும் மேற்பட்டோர், அரசு விரைவுப் போக்குவரத்துக் கழகத்தில் பணியில் அமர்த்தப்பட்டுள்ளனர். மேலும், புதிதாக 7,500 பேருந்துகள் வாங்க முதல்வர் உத்தரவிட்டுள்ளார். அப்படி இருக்கும்போது, அரசுப் போக்குவரத்துக் கழகத்தை எப்படி தனியார்மயமாக்க முடியும்?

இலவசம் கொடுத்ததால்தான் போக்குவரத்துத் துறை உயிா் பெற்றுள்ளது. நிகழாண்டு ரூ. 2,500 கோடி போக்குவரத்துக் கழகத்துக்கு முதலமைச்சர் நிதி ஒதுக்கீடு செய்துள்ளார். மகளிருக்கான இலவசப் பேருந்து திட்டத்தை கிண்டல் செய்வதை விடுத்து மக்களுக்குப் பணியாற்ற வேண்டும். பேருந்துக் கட்டணம் உயா்வு என்பது தற்போது கிடையாது. இதர மாநிலங்களில் டீசல், பெட்ரோல் விலை உயரும் போதெல்லாம் பேருந்து கட்டணம் உயர்த்தப்படுகிறது. ஆனால், தமிழ்நாட்டில் பேருந்து கட்டணத்தை உயா்த்தாமலேயே போக்குவரத்துக் கழகத்தை நடத்த வேண்டும் என தமிழ்நாடு முதலமைச்சர் உத்தரவிட்டுள்ளார்”

அரசுப் பேருந்துகளில் கட்டண உயர்வு என்பது தற்போதைக்கு கிடையாது. இதர மாநிலங்களில் டீசல், பெட்ரோல் விலை உயரும் போதெல்லாம், பேருந்துக் கட்டணம் உயர்த்தப்படுகிறது. ஆனால்,தமிழகத்தில் பேருந்துக் கட்டணத்தை உயர்த்தாமலேயே, போக்குவரத்துக் கழகத்தை நடத்துமாறு முதல்வர் உத்தரவிட்டுள்ளார்” இவ்வாறு அமைச்சர் கூறினார்.

Read more | செக்…! இனி பானிபூரி & தெருவோர கடைகளுக்கு மருத்துவ சான்று மற்றும் பதிவு உரிமம் கட்டாயம்…!

Tags :
Advertisement