முக்கிய செய்திகள்தேசிய செய்திகள்மாவட்டம்உலகம்சிறப்பு கட்டுரைகள்சினிமா 360°
ஆரோக்கியமான வாழ்வு | பெண்கள் நலம்
அரசியல்அறிய வேண்டியவைதொழில்நுட்பம்விளையாட்டுஆன்மீகம்வணிகம்
Advertisement

போக்குவரத்து துறை ஊழியர்கள் ஜீன்ஸ், டி-சர்ட் அணியத் தடை!

07:32 PM Apr 02, 2024 IST | Mari Thangam
Advertisement

ராஜஸ்தானில் போக்குவரத்து துறை ஊழியர்கள் ஜீன்ஸ், டி-சர்ட் போன்ற ஆடைகள் அணிய கூடாது என போக்குவரத்துத் துறை துணை ஆணையம் மணீஷ் அரோரா தெரிவித்துள்ளார்.

Advertisement

சில நாட்களுக்கு முன்பு ராஜஸ்தான் தலைமை செயலர் அலுவலகத்தில் மணீஷ் அரோரா திடீர் ஆய்வு மேற்கொண்டார். அங்கு பணி செய்யும் ஊழியர் டி-சர்ட் போன்ற ஆடைகளை அணிந்திருந்தனர். அதனை தொடர்ந்து, பணியின் போது ஊழியர்கள் கண்ணியமான ஆடைகளை அணிய வேண்டும் என அறிக்கை வெளியிட்டார்.

அறிக்கையில் குறிப்பிட்டுள்ளதாவது, “பணியின் போது ஜீன்ஸ், டி-சர்ட் போன்ற அநாகரிக ஆடைகள் அணிவது, அலுவலகத்தின் கண்ணியத்திற்கு எதிராக உள்ளது. எனவே ஊழியர்கள் சாதாரண உடை அணிந்து அலுவலகத்திற்கு வர வேண்டும்” என அறிக்கையில் கூறியிருந்தார். மேலும் ஆண்கள் பேண்ட் சட்டை, பெண்கள் புடவை அல்லது சுடிதார் போன்ற உடையில் வரலாம். ஊழியர்கள் இதனை கட்டாயம் கடைபிடிக்க வேண்டும் எனவும் தெரிவித்தார்.

Tags :
#indiadress codeRajastantransport workers
Advertisement
Next Article