முக்கிய செய்திகள்தேசிய செய்திகள்மாவட்டம்உலகம்சிறப்பு கட்டுரைகள்சினிமா 360°
ஆரோக்கியமான வாழ்வு | பெண்கள் நலம்
அரசியல்அறிய வேண்டியவைதொழில்நுட்பம்விளையாட்டுஆன்மீகம்வணிகம்
Advertisement

ஓராண்டு சான்றிதழ் படிப்பிற்கான பயிற்சி வகுப்புகள்...! ஆன்லைன் மூலம் விண்ணப்பங்கள் வரவேற்பு...!

Training courses for one year certificate course.
07:35 AM Sep 22, 2024 IST | Vignesh
Advertisement

தொழில் முனைவோர் மற்றும் புத்தாக்கம்" தொடர்பான ஓராண்டு சான்றிதழ் படிப்பிற்கான பயிற்சி வகுப்புகள் தொடங்கப்படவுள்ளன.

Advertisement

இதுகுறித்து சேலம் மாவட்ட ஆட்சித்தலைவர் தெரிவித்துள்ளதாவது: குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சர் அவர்கள் சட்டமன்றத்தில், தமிழ்நாடு தொழில் முனைவோர் மேம்பாடு மற்றும் புத்தாக்க நிறுவனமானது அகமதாபாத் தொழில் முனைவோர் மேம்பாடு மற்றும் புத்தாக்க நிறுவனத்துடன் இணைந்து "தொழில் முனைவோர் மற்றும் புத்தாக்கம்" என்ற ஓராண்டு சான்றிதழ் படிப்பு தொடங்கப்படும் என்று அறிவித்திருந்தார்கள்.

அதன்படி, வருகின்ற 14.10.2024 முதல் இதற்கான வகுப்புகள் தொடங்கப்படுகிறது. இப்பயிற்சியில் சேருவதற்கான விண்ணப்பங்கள் செயல்முறைகள் தற்போது நடைபெற்று வருகிறது. மேலும், இதற்கான நேர்காணல் செப்டம்பர் 2024 கடைசி வாரத்தில் திட்டமிடப்பட்டுள்ளது.

தொழில் முனைவோர் மற்றும் புத்தாக்கம்" என்ற ஓராண்டு சான்றிதழ் படிப்பிற்கான கட்டணமாக ரூ.80,000/- நிர்ணயிக்கப்பட்டுள்ளது. அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் ஏதேனும் ஒரு பட்டப்படிப்போ அல்லது பட்டயப்படிப்போ அல்லது ஐடிஐ அல்லது 10-ஆம் வகுப்போ அல்லது 12-ஆம் வகுப்போ படித்திருப்பதுடன் தொடர்புடைய பயிற்சியில் 2 வருட அனுபவத்துடன் இருப்பவர்கள் தகுதியானவர்கள். இதில் பயன்பெற https://oneyearcourse.editn.in/ என்ற இணையதளத்தின் வாயிலாக விண்ணப்பித்துப் பயன்பெறலாம்.

இந்த முயற்சி தமிழ்நாட்டை ஒரு டிரில்லியன் டாலர் பொருளாதாரமாக மாற்றுவதோடு தமிழ்நாடு அரசின் தொலைநோக்கு பார்வையை அடையவும், நமது மாநிலத்தின் தொழில் முனைவோரிடம் குறிப்பிடத்தக்க தாக்கத்தை ஏற்படுத்தும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. எனவே, சேலம் மாவட்டத்தைச் சேர்ந்த தொழில் முனைவோர் ஆர்வமுள்ளவர்கள் "தொழில் முனைவோர் மற்றும் புத்தாக்கம்" ஓராண்டு சான்றிதழ் படிப்பில் சேர்ந்து பயனடைய வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags :
Dt collectorSalem dtTamilnadutn government
Advertisement
Next Article