For the best experience, open
https://m.1newsnation.com
on your mobile browser.
Advertisement

Train | ரயில் பயணிகளே..!! உங்களுக்கு இந்த பிரச்சனை இருக்கா..? நிர்வாக கொடுத்த பதில்..!!

11:31 AM Mar 28, 2024 IST | Chella
train   ரயில் பயணிகளே     உங்களுக்கு இந்த பிரச்சனை இருக்கா    நிர்வாக கொடுத்த பதில்
Advertisement

ரயில்களில் பயணம் செய்யும்போது, டிக்கெட் இல்லாமல் பலர் ஏறி சீட்டுகளை ஆக்கிரமிப்பு செய்தால், என்ன செய்வது என்பது குறித்து ரயில்வே நிர்வாகம் விளக்கம் கொடுத்துள்ளது.

Advertisement

நாட்டில் மக்கள் பலர் அதிகமாக ரயில் பயணங்களையே அதிகம் விரும்புகின்றனர். தினமும் லட்சக்கணக்கான பயணிகள் ரயில்கள் மூலம் பயணம் செய்கின்றனர். பலர் ரயில்களில் சிரமமின்றி பயணம் செய்ய வேண்டும் என்று டிக்கெட்டுகளை முன்னதாகவே முன்பதிவு செய்கின்றனர். ஆனால், முன்பதிவு செய்யப்படாத டிக்கெட்டுகள் அதிகளவில் விற்பனையானால், அந்த டிக்கெட்டுகளை எடுத்த பல பயணிகள் முன்பதிவு செய்யப்பட்ட ரயில் பெட்டிகளில் ஏறி பயணம் செய்கின்றனர்.

ஆகையால், முன்பதிவு செய்தவர்களுக்கு அசௌகரியம் ஏற்படுகிறது. இப்படி ஒரு சூழலில் சிக்கியவர் தன்னுடைய எக்ஸ் தள பக்கத்தில் இதுகுறித்து பதிவு ஒன்றை பதிவிட்டுள்ளார். இந்நிலையில், இந்தப் பதிவில் ரயில்வே நிர்வாகம் நடவடிக்கை எடுப்பதாக கூறி பதில் அளித்துள்ளது. மேலும், இது குறித்த புகார்களை செய்ய 139 என்ற எண்ணிற்கு டயல் செய்யலாம் எனவும் ரயில் மதாத் என்ற இணையதளத்தில் இது குறித்து புகார் செய்யலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Read More : செம குட் நியூஸ்..!! தமிழ்நாட்டில் 100 நாள் வேலை திட்டத்திற்கான ஊதியம் அதிரடி உயர்வு..!! மத்திய அரசு அறிவிப்பு..!!

Advertisement