Train Accident | மேற்குவங்க ரயில் விபத்துக்கு காரணம் இதுதான்..!! வெளியான அதிர்ச்சி தகவல்..!!
சிக்னலில் சரக்கு ரயில் நிற்காமல் வந்ததே விபத்திற்கு காரணம் என்று முதற்கட்ட தகவல் வெளியாகியுள்ளது.
திரிபுரா மாநிலம் அகர்தலாவில் இருந்து மேற்குவங்கத்தில் உள்ள சியல்டாவை நோக்கி கன்ஜன்ஜங்கா விரைவு ரயில் சென்று கொண்டிருந்தது. அப்போது, டார்ஜிலிங் மாவட்டத்தில் உள்ள ருயிதாஸா என்ற இடத்தில் பயணிகள் ரயில் மீது சரக்கு ரயில் பின்பக்கமாக மோதியது. இதில், பயணிகள் விரைவு ரயிலின் பெட்டிகள் தடம்புரண்டு தண்டவாளத்தில் கவிழ்ந்தன. இதில், 8 பேர் உடல் நசுங்கி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். மேலும், படுகாயம் அடைந்த 25 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
கன்ஜன்ஜங்கா விரைவு ரயில் விபத்து குறித்து உதவி கோருவதற்கு, பொதுமக்கள் தொடர்பு கொள்ள இலவச எண்களும் அறிவிக்கப்பட்டுள்ளன. மேலும், மீட்பு பணிகள் போர் கால அடிப்படையில் நடைபெற்று வருவதாக மேற்குவங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி தெரிவித்துள்ளனர்.
விபத்து நடந்த இடத்திற்கு அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் நேரில் செல்கிறார். சிக்னலில் சரக்கு ரயில் நிற்காமல் வந்ததே விபத்திற்கு காரணம் என்று முதற்கட்ட தகவல் வெளியாகியுள்ளது. விபத்தில் சரக்கு ரயிலின் ஓட்டுநர் மற்றும் பயணிகள் விரைவு ரயிலில் இருந்த GUARD உயிரிழந்தது குறிப்பிடத்தக்கது.
Read More : நாளை (ஜூன் 18) மூன்றாம் உலகப்போர் தொடங்கும்..!! பீதியை கிளப்பும் கணிப்பு..!! அச்சத்தில் உலக நாடுகள்..!!