பரபரப்பு.. இரயிலை கவிழ்க்க தண்டவாளத்தில் கேஸ் சிலிண்டர்..!! லோகோ பைலட் துரித செயலால் பெரும் விபத்து தவிர்ப்பு..!!
உத்தரபிரதேசத்தின் கான்பூர் டெஹாட் மாவட்டத்தில் உள்ள ரயில் பாதையில் எரிவாயு சிலிண்டர் கண்டுபிடிக்கப்பட்டது. டெல்லி-ஹவுரா ரயில் பாதையில், மகாராஜ்பூரின் பிரேம்பூர் நிலையத்திற்கு அருகில் காலை 6.09 மணியளவில் இந்த சம்பவம் நடந்தது. தண்டவாளத்தில் சிலிண்டர் இருப்பதை பார்த்து சரக்கு ரயிலின் லோகோ பைலட் பிரேக்கை இழுத்ததால் பெரும் ரயில் விபத்து தவிர்க்கப்பட்டது.
சரக்கு ரயில் கான்பூரில் இருந்து பிரயாக்ராஜ் நோக்கி லூப் லைன் வழியாக சென்று கொண்டிருந்தபோது, தண்டவாளத்தின் நடுவில் சிறிய கேஸ் சிலிண்டர் வைக்கப்பட்டிருப்பதை லோகோ பைலட் கவனித்தார். உடனடியாக பிரேக் போட்டு, ரயில் நிறுத்தப்பட்டது. இது குறித்து அப்பகுதி போலீசார் மற்றும் ரயில்வே அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு, சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து பார்வையிட்டனர். இந்த சம்பவம் குறித்து தீவிர விசாரணை நடைபெற்று வருகிறது.
கான்பூரில் சமீப காலங்களில் இதுபோன்ற மூன்றாவது சம்பவம் இதுவாகும். சில நாட்களுக்கு முன், பாங்கி தொழிற்பேட்டை அருகே, சபர்மதி எக்ஸ்பிரஸ் ரயிலின் இன்ஜின் மற்றும் 20 பெட்டிகள் தடம் புரண்டன. இந்த வழக்கில் அடையாளம் தெரியாத நபர்கள் மீது எப்ஐஆர் பதிவு செய்யப்பட்டது.
மற்றொரு சம்பவம் :
ரயிலைத் தடம் புரளச் செய்யும் மற்றொரு முயற்சியில், நேற்று குஜராத்தின் சூரத் அருகே ரயில் தண்டவாளத்தில் இருந்த மின் தகடுகள் மற்றும் சாவிகள் அகற்றப்பட்ட ஒரு பெரிய சம்பவம் வெளிச்சத்திற்கு வந்தது, இது இரயில் தடம் புறல செய்யப்பட்ட சதி என்று அதிகாரிகள் தெரிவித்தனர். சூரத்தில் உள்ள கொசம்பா சந்திப்பு ரயில் நிலையம் அருகே அதிகாலை 5 மணியளவில் தண்டவாளத்தை ஆய்வு செய்ய டிராக்மேன் சென்றபோது இந்த சம்பவம் நடந்துள்ளது.
Read more ; செம வாய்ப்பு…! SBI வங்கியில் 1511 காலியிடங்கள்… உடனே விண்ணப்பிக்கவும்…!