செல்போன் பயனர்களுக்கு குட் நியூஸ்.! தேவையில்லாத அழைப்புகளை தவிர்க்க புதிய வசதி.! 'TRAI' வெளியிட்ட உத்தரவு.!
TRAI: செல்போன்கள் இன்று இன்றியமையாத தேவையாகி விட்டது. தொலைபேசி அழைப்புகள் மேற்கொள்வது என்பதையும் தாண்டி இணையதள உபயோகம் மற்றும் பணப்பரி மாற்றங்கள் வங்கி சேவைகள் ஆன்லைனில் பொருட்களை வாங்குவது என அனைத்திற்கும் செல்போன்கள் இன்று பயன்படுத்தப்படுகிறது. ஸ்மார்ட்போன்களின் வளர்ச்சியால் இவை அனைத்தும் சாத்தியமாகி இருக்கிறது.
எனினும் செல்போன்களால் பொதுமக்களுக்கு தொல்லை ஏற்படும் சம்பவங்களும் நடைபெற்று வருகிறது. குறிப்பாக பெண்களுக்கு வரும் தேவையில்லாத அழைப்புகள் மற்றும் ஆபாச அழைப்புகளால் பல்வேறு மன உளைச்சல்கள் ஏற்படுகிறது. மேலும் பல நபர்கள் செல்போன் மூலமாக பேசி பண மோசடியில் ஈடுபடுவதும் அதிகரித்து வருகிறது. இதுபோன்ற தொல்லைகளை தவிர்ப்பதற்கு தொலைத் தொடர்பு ஒழுங்குமுறை ஆணையமான ட்ராய்(TRAI) புதிய உத்தரவு ஒன்றை பிறப்பித்து இருக்கிறது.
அந்த உத்தரவின்படி இந்தியா முழுவதிலும் செல்போன்களுக்கு வரும் அழைப்புகளில் அழைப்பவரின் பெயரை காட்டும் வசதியை அனைத்து பயனர்களுக்கும் அளிக்குமாறு செல்போன் நெட்வொர்க் நிறுவனங்களுக்கு மத்திய தொலைத் தொடர்பு ஒழுங்குமுறை ஆணையம் உத்தரவிட்டுள்ளது. மேலும் நிறுவனங்கள் பயன்படுத்தும் செல்போன் நண்பர்களாக இருந்தால் அந்த நிறுவனம் ஜிஎஸ்டி-க்கு பதிர்ந்திருப்பவரின் பெயரை காட்டுமாறு ட்ராய்(TRAI) உத்தரவிட்டுள்ளது.
விரைவில் இந்த சேவை இந்தியா முழுவதும் நடைமுறைக்கு வர இருக்கிறது. இதன் மூலம் நமது செல்போனுக்கு வரும் தேவையில்லாத அழைப்புகளை உடனடியாக துண்டித்து விடலாம். இதற்கு முன்பு இந்த சேவை ட்ரு காலர் போன்ற செய்திகளை பயன்படுத்துபவர்களுக்கு மட்டுமே கிடைத்தது. தற்போது இது அனைத்து செல்போன் பயனாளர்களுக்கும் வர இருக்கிறது.