உயிரை பறித்த விபரீத விளையாட்டு... குடல் வெடித்து இளைஞர் பலி!
கர்நாடகாவில் இளைஞர் ஒருவர் தனது நண்பரின் ஆசனவாயில் காற்றை செலுத்தியபோது, குடல் வெடித்து அந்த நபர் பரிதாபமாக உயிரிழந்துள்ளார். விளையாட்டுத்தனமாக செய்த சம்பவம் விபரீதமாக முடிந்தது குறித்து விரிவாக பார்ப்போம்.
பெங்களூர் புறநகர் பகுதியான தேவனஹள்ளி என்ற பகுதியில் தான் இந்தச் சம்பவம் நடந்துள்ளது. உயிரிழந்த நபர் யோகேஷ் என்றும் அவர் அங்கே உணவு டெலிவரி ஏஜெண்டாக இருப்பதும் தெரிய வந்துள்ளது. காற்று அதீத அழுதத்தில் உள்ளே உடலில் செலுத்தப்பட்டதாகவும் இதனால் உள் உறுப்புகளில் பலத்த காயம் ஏற்பட்டு இருப்பதாக மருத்துவர்கள் கூறியுள்ளனர். குடல் வெடித்து சிதறியதே விபத்திற்கு காரணம் என்று மருத்துவர்கள் கூறியுள்ளனர்..
உயிரிழந்த அந்த நபர் தனது தந்தை மற்றும் சகோதரியுடன் தனிசந்திராவில் வசித்து வந்துள்ளார். கடந்த மார்ச் 25ஆம் தேதி நடந்த இந்தச் சம்பவத்தில் குற்றம் சாட்டப்பட்ட முரளி என்பவரை போலீசார் கைது செய்துள்ளனர்.
போலீஸ் விசாரணையில், வண்டிகளில் அழுக்கை அகற்றப் பயன்படுத்தப்படும் சாதனத்திலிருந்து உயர் அழுத்தம் கொண்ட காற்றை அவரது முகத்தில் செலுத்தி இருக்கிறார். காற்று படுவேகமாக முகத்தில் அடிக்கவே யோகேஷ் முகத்தை மறைக்க மூடிக் கொண்டுள்ளார். இதனால்யோகேஷின் ஆசனவாயுவில் முரளி காற்றை செலுத்தி உள்ளார். இதனால் நிலைதடுமாறிய யோகேஷ் கீழே விழுந்துள்ளார் என்பது தெரிய வந்ததுள்ளது.
உயர் அழுத்தம் கொண்ட காற்று அவரது உடலில் செலுத்தப்பட்டதே அவரது மரணத்திற்கு காரணமாக இருந்துள்ளது. யோகேஷின் சகோதரியின் திருமணம் விரைவில் நடக்க இருந்தது. இதற்காக அவர் தனது பைக்கை சர்வீஸுக்கு கொடுத்துள்ளார். அப்போது வண்டியை எடுக்க சென்ற போது தான் இந்தச் சம்பவம் நடந்துள்ளது. இது குறித்து வழக்குப்பதிவு செய்துள்ள போலீசார் தீவிர விசாரணையில் இறங்கியுள்ளனர்.
இரண்டு நண்பர்கள் விளையாட்டுதனமாக செய்த காரியம் ஒருவர் உயிரையே பறித்துள்ளது. இதன் காரணமாகவே இதுபோன்ற கருவிகளில் விளையாடக்கூடாது.. இல்லையென்றால் அதுவே விணையாகி போகும் என்று எச்சரிக்கிறார்கள்.