24 மணிநேரத்தில் சோகம்!. மின்னல் தாக்கியதில் 8 பேர் பலி!. முதலமைச்சர் நிவாரணம் அறிவிப்பு!.
Lightning strike: பீகார் மாநிலத்தின் பல்வேறு இடங்களில் மின்னல் தாக்கியதில் கடந்த 24 மணிநேரத்தில் 8 பேர் உயிரிழந்துள்ளதாக அம்மாநில அரசு அறிவித்துள்ளது.
பீகாரில் மாநிலத்தில் கடந்த சில நாட்களாக மழை பெய்து வருகிறது. மேலும், அடுத்த 5 நாட்களுக்கு கிழக்கு ராஜஸ்தான், உத்தரகண்ட், உத்தரப் பிரதேசம், பீகார், ஜார்கண்ட், ஒடிசா மற்றும் கங்கை மேற்கு வங்கத்தில் இடி, மின்னலுடன் மழை பெய்யும் என்றும் (மணிக்கு 30-40 கிமீ) வேகத்தில் பலத்த காற்று வீசும் என்றும் வானிலை மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. இந்த நிலையில், பகல்பூர், முங்கர், ஜமுய், கிழக்கு சம்பாரண், மேற்கு சம்பாரண் மற்றும் அராரியா மாவட்டங்களில் கடந்த 24 மணி நேரத்தில் மின்னல் தாக்கியதில் 8 பேர் உயிரிழந்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
மின்னல் தாக்கி 8 பேர் உயிரிழந்ததற்கு முதல்வர் நிதிஷ் குமார் இரங்கல் தெரிவித்துள்ளார். தொடர்ந்து உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா 4 லட்சம் ரூபாய் நிவாரணம் அறிவித்துள்ள முதலமைச்சர் நிதிஷ் குமார், சீரற்ற காலநிலையின் போது முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்கவும், பேரிடர் மேலாண்மைத் துறையின் அறிவுறுத்தல்களைப் பின்பற்றவும் முதலமைச்சர் வேண்டுகோள் விடுத்துள்ளார். மேலும் மோசமான வானிலை நிலவுவதால் மக்கள் அனைவரும் வீட்டிலேயே பாதுகாப்பாக இருங்கள் என்று அறிவுறுத்தியுள்ளார்.
Readmore: ஷாக்!. இந்த 35 ஸ்மார்ட் போன்களில் வாட்ஸ் அப் வேலை செய்யாது!. லிஸ்ட் இதோ!