For the best experience, open
https://m.1newsnation.com
on your mobile browser.
Advertisement

சந்தானம் படத்தில் நடந்த துயர சம்பவம்..!! எனக்கு அப்போ 13 வயசு..!! அந்த இடத்தில் தொட்டு பாலியல் தொல்லை..!!

02:00 PM Jan 02, 2024 IST | 1newsnationuser6
சந்தானம் படத்தில் நடந்த துயர சம்பவம்     எனக்கு அப்போ 13 வயசு     அந்த இடத்தில் தொட்டு பாலியல் தொல்லை
Advertisement

பஞ்சாபி பொண்ணான யாஷிகா ஆனந்த், மாடலிங் துறையில் இருந்து சினிமாவுக்குள் நுழைந்தவர். ‘இருட்டு அறையில் முரட்டுக் குத்து’, ‘லெஜெண்ட்’, ‘சில நொடிகளில்’ உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார். கடந்த வருடத்தில் பார்ட்டி முடித்துத் திரும்பியவரின் கார் எதிர்பாராத விதமாக விபத்துக்குள்ளானது. இதில் இவரது நெருங்கிய தோழி உயிரிழந்தார். இந்த விபத்தில் யாஷிகாவுக்கு பலத்த அடிபட்டது. இந்த விபத்தில் இருந்து முழுவதுமாக மீண்டு வந்திருப்பவர் தற்போது மீண்டும் பிஸியாக படங்களில் நடித்து வருகிறார்.

Advertisement

இவரது கைவசம் தற்போது, ‘இவன்தான் உத்தமன்’, ‘பாம்பாட்டம்’ உள்ளிட்டப் பல படங்கள் உள்ளன. இந்நிலையில், சமீபத்திய பேட்டி ஒன்றில் யாஷிகா 13 வயதில் தனக்கு ஏற்பட்ட பாலியல் தொல்லை பற்றி மனம் திறந்து பேசியுள்ளார். “நடிகர் சந்தானத்துடன் 'இனிமே இப்படித்தான்’ என்ற படத்தில் ஒரு சின்ன ரோலில் நடித்தேன். இதன் படப்பிடிப்பு புதுச்சேரியில் நடந்தது. அப்போது, ஒருவன் என்னைத் தவறான இடத்தில் தொட்டான். எனக்கு அதிர்ச்சியாகி விட்டது.

நான் எதைப்பற்றியும் யோசிக்கவில்லை. உடனே, அவனை நான் எட்டி உதைத்துவிட்டேன். 13 வயதில் என் தைரியத்தை நினைத்து நான் பாராட்டுகிறேன். நான் மட்டுமல்ல, பெண்களுக்கு எப்போதுமே தைரியம்தான் முக்கியம்” என கூறினார்.

Tags :
Advertisement