தொடரும் சோகம்!… நிலச்சரிவில் சிக்கி பலியானோர் எண்ணிக்கை 28 ஆக உயர்வு!
Landslide: மிசோரமின் ஐஸ்வால் மாவட்டத்தில் நிலச்சரிவுகளில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 28 ஆக உயர்ந்துள்ளது.
மிசோரம் மாநிலம் ஐஸ்வால் மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக கனமழை காரணமாக அங்காங்கே நிலச்சரிவு ஏற்பட்டு வருகிறது. இந்தநிலையில், நேற்று காலை 11 மணியளவில் ஐஸ்வாலின் தெற்கு புறநகரில் அமைந்துள்ள ஹ்லிமென் என்ற இடத்தில் நிலச்சரிவு ஏற்பட்டது. இதில் மண்ணுக்குள் புதைந்து இடிபாடுகளில் இருந்து ஒருவரின் உடல் கண்டெடுக்கப்பட்டது. அந்தவகையில், இதுவரை நிகழ்ந்த நிலச்சரிவுகளின் இடிபாடுகளில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 28 ஆக உயர்ந்துள்ளதாக ஐஸ்வால் காவல்துறை கண்காணிப்பாளர் (SP) ரஹூல் அல்வால் தெரிவித்துள்ளார்.
உயிரிழந்தவர்களில் ஜார்கண்ட் மற்றும் அஸ்ஸாமைச் சேர்ந்த மூன்று சிறார்கள் என்றும் வெளியூரை சேர்ந்த ஏழு பேரும் அடங்குவர் என்று ரஹூல் கூறினார். மேலும் நிலச்சரிவுகளில் சிக்கிய ஆறு மாத குழந்தை உட்பட ஆறு பேரை இன்னும் காணவில்லை என்றும் குறிப்பிட்டார்.
மெல்தூம் பகுதியில் உள்ள கல் குவாரியில் ஏற்பட்ட பாரிய நிலச்சரிவில் இருந்து 15 சடலங்கள் மீட்கப்பட்ட நிலையில், ஆறு பேர் ஹிலிமனில் இருந்தும், இரண்டு பேர் அய்ஸ்வாலில் இருந்து சுமார் 15 கிமீ தொலைவில் உள்ள பால்காவ்ன் கிராமத்தில் இருந்தும், லுங்சே மற்றும் கெல்சிஹ் கிராமங்களில் இருந்து தலா ஒருவரின் உடல்கள் மீட்கப்பட்டுள்ளன.
நிலச்சரிவில் வீடுகள் அடித்துச் செல்லப்பட்டுள்ளதால், மீட்பு மற்றும் தேடுதல் நடவடிக்கைகள் தொடர்ந்து நடைபெற்றுவருவதாகவும், மீட்பு பணிகளில் தேசிய பேரிடர் மீட்புப் படை (NDRF), மாநில பேரிடர் மீட்புப் படை (SDRF), காவல் துறை, தீயணைப்புத் துறை மற்றும் விரைவுப் பதிலளிப்புக் குழு (QRT) ஆகியவற்றின் குழுக்கள் இளம் மிசோ சங்கத்தின் (YMA) தன்னார்வத் தொண்டர்கள் ஈடுபட்டுள்ளனர் என்றும் கூறினார்.
Readmore: