முக்கிய செய்திகள்தேசிய செய்திகள்மாவட்டம்உலகம்சிறப்பு கட்டுரைகள்சினிமா 360°
ஆரோக்கியமான வாழ்வு | பெண்கள் நலம்
அரசியல்அறிய வேண்டியவைதொழில்நுட்பம்விளையாட்டுஆன்மீகம்வணிகம்
Advertisement

வாகன ஓட்டிகள் கவனத்திற்கு...! வரும் 17-ம் தேதி சென்னையில் போக்குவரத்து மாற்றம்...! முழு விவரம்

07:00 AM Jan 14, 2024 IST | 1newsnationuser2
Advertisement

காணும் பொங்கல் அன்று, மெரினா கடற்கரை சாலையில் செய்யப்படும் போக்குவரத்து மாற்றங்கள் குறித்து அறிக்கை வெளியிட்டது சென்னை போக்குவரத்து காவல்துறை.

Advertisement

இது குறித்து போக்குவரத்து காவல்துறை வெளியிட்ட செய்தி குறிப்பில்; 17/01/2024 அன்று காணும் பொங்கல் கொண்டாட்டத்தினை முன்னிட்டு சென்னையில் அனைத்து சாலைகளிலும் குறிப்பாக காமராஜர் சாலையில் பெருந்திரளான மக்கள் கூடுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. இது தொடர்பாக சூழ்நிலைக்கு தகுந்தவாறு கீழ்கண்ட போக்குவரத்து மாற்றங்கள் செய்யப்பட உள்ளன.

காமராஜர் சாலையில் பொது மக்கள், சாலையில் அதிகமாகும் வரை எந்தவித போக்குவரத்து மாற்றமும் செய்யப்படமாட்டாது. மெரினா கடற்கரைக்கு வரும் வாகனங்கள் காமராஜர் சாலையில் (மெரினா கடற்கரை சாலை) அதிகரிக்கும் போது போர்நினைவுச் சின்னத்தில் இருந்து ( War Memorial) வரும் வாகனங்கள் வழக்கம் போல் கலங்கரை விளக்கம் ( Light House) நோக்கி அனுமதிக்கப்படும். கலங்கரை விளக்கத்தில் இருந்து வரும் வாகனங்கள் கண்ணகி சிலையில் இடதுபுறமாக கட்டாயமாக திருப்பப்பட்டு (Compulsory Left Diversion) பாரதி சாலை பெல்ஸ் சாலை வழியாக வாலாஜா சாலை சென்று தங்கள் இலக்கை அடையலாம்.

வாலாஜா சாலையில் இருந்து விக்டோரியா விடுதி சாலை நோக்கி வாகனங்கள் செல்ல தடை செய்தும், பாரதி சாலையில் இருந்து விக்டோரியா விடுதி சாலைக்கு வாகனங்கள் அனுமதிக்கவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது ( விக்டோரியா விடுதி சாலை ஒரு வழிப் பாதையாக மாற்றப்படும்) வாகன ஓட்டுநர்கள் அனைவரும் ஒத்துழைப்பு கொடுக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags :
bikeChennaiPongaltraffic
Advertisement
Next Article