ஆசிரியர் கல்வி நிறுவன செயல்திறன் மதிப்பீட்டு அறிக்கை சமர்ப்பிக்க வேண்டும்...!
ஆசிரியர் கல்வி நிறுவனங்களின் செயல்திறன் மதிப்பீட்டு அறிக்கையை சமர்ப்பிப்பதற்கான அறிவிப்பை என்.சி.டி.இ வெளியிட்டுள்ளது.
இது குறித்து என்.சி.டி.இ வெளியிட்ட செய்தி குறிப்பில்; ஆசிரியர் கல்விக்கான தேசிய கவுன்சில் (என்.சி.டி.இ) என்பது நாடு முழுவதும் ஆசிரியர் கல்வி முறையின் திட்டமிட்ட மற்றும் ஒருங்கிணைந்த வளர்ச்சி, ஆசிரியர் கல்வி அமைப்பில் விதிமுறைகள், தரங்களை ஒழுங்குபடுத்துதல், முறையாக பராமரித்தல் மற்றும் அதனுடன் தொடர்புடைய விஷயங்களை அடைவதற்காக 1995 ஆகஸ்ட் 17-ம் தேதி ஆசிரியர் கல்விக்கான தேசிய கவுன்சில் சட்டம், 1993-ன் கீழ் உருவாக்கப்பட்ட ஒரு சட்டரீதியான அமைப்பாகும்.
அங்கீகரிக்கப்பட்ட நிறுவனங்கள் என்.சி.டி.இ சட்டம் 1993, விதிமுறைகள் & தரநிலைகள் மற்றும் வழிகாட்டுதல்களின்படி செயல்படுகின்றனவா என்பதை உறுதி செய்வதற்காகவும், அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனங்களில் பொறுப்புணர்வை அமல்படுத்துவதற்காகவும், நாடு முழுவதும் ஆசிரியர் கல்வித் துறையில் தரம் மற்றும் சேவை வழங்கலில் முன்னேற்றத்தைக் கொண்டுவருவதற்கும், மன்றத்தின் பொதுக்குழு 2024 ஆகஸ்ட் 5-ம் தேதி அன்று நடைபெற்ற அதன் 61-வது கூட்டத்தில் கல்விக்கான செயல்திறன் மதிப்பீட்டு அறிக்கையை முடிவு செய்தது.
என்சிடிஇ தளத்தில் தற்போதுள்ள அனைத்து ஆசிரியர் கல்வி நிறுவனங்களாலும் ஆண்டு வாரியாக இந்த அறிக்கைகள் ஆன்லைனில் சமர்ப்பிக்கப்பட வேண்டும். கவுன்சிலின் மேற்கண்ட முடிவின் அடிப்படையில், என்சிடிஇ 09.09.2024 தேதியிட்ட பொது அறிவிப்பை வெளியிட்டுள்ளது, இது என்சிடிஇ இணையதளத்தில் (httpsncte.gov.in) கிடைக்கிறது. அங்கீகரிக்கப்பட்ட ஆசிரியர் கல்வி நிறுவனங்கள் 2021-22 & 2022-23 கல்வியாண்டிற்கான அறிக்கைகளை ஆன்லைன் முறையில் மேற்கூறிய தளத்தில் சமர்ப்பிக்க வேண்டும். இதற்கான இணைப்பு, அதாவது, httpsncte.gov.inpar பொது அறிவிப்பிலும் கொடுக்கப்பட்டுள்ளது. ஆன்லைன் அறிக்கையை சமர்ப்பிப்பதற்கு 09.09.2024 முதல் 10.11.2024 வரை (இரவு 11.59 மணி வரை) காலக்கெடு உள்ளது.