டெத் பள்ளத்தாக்கு | காலணி இல்லாமல் நடந்து சென்ற சுற்றுலா பயணி தோல் உருகி மருத்துவமனையில் அனுமதி!!
ஜூலை 20 அன்று, 42 வயதான பெல்ஜிய சுற்றுலாப் பயணி டெத் வேலியின் குன்றுகளில் தனது காலணி இல்லாமல் வெறும் காலில் நடந்ததால், தோல் உருகி தீக்காயம் ஏற்பட்ட சம்பவம் நிகழ்ந்துள்ளது.
இதுகுறித்து, டெத் பள்ளத்தாக்கு தேசிய பூங்கா தரப்பில் கூறுகையில், 42 வயதான அந்த நபர் 123 டிகிரி வெப்பத்தில் நடந்ததால் காலில் கொப்பளங்கள் ஏற்பட்டுள்ளது. கடுமையான வலி காரணமாக நகர முடியாமல், அப்படியே நின்று விட்டார். பின்னர் அவரது குடும்பத்தினரும், சக பூங்கா சுற்றுலா பயணிகளும் அவரை வாகன நிறுத்துமிடத்திற்கு அழைத்துச் சென்றனர். பின்னர் ஆம்புலன்ஸ் மூலம் மருத்துவ மனைக்கு அழைத்துச் சென்றனர்.
தொடர்ந்து பூங்கா அதிகாரிகள் கூறுகையில், "இது கடற்கரை போல் இருக்கும் என்று மக்கள் நினைக்கிறார்கள், மணல் மேட்டில், நிலத்தடி வெப்பநிலை காற்றை விட அதிகமாக இருக்கும். தீவிர வெப்பநிலை காரணமாக, அந்த குன்றுகள் அதிக வெப்பத்தை வெளிப்படுத்துகிறது. இதுபோன்ற சம்பவங்களைத் தவிர்க்க, பூங்கா மற்றும் அதன் மென்மையான குன்றுகளில் மூடிய காலணிகளில் மட்டுமே நடக்குமாறு பூங்கா அதிகாரிகள் பரிந்துரைக்கின்றனர். மேலும், வெப்பத்தின் போது டெத் பள்ளத்தாக்குக்குச் செல்ல ஆர்வமுள்ளவர்களுக்கு சில ஆலோசனைகளையும் வழங்கினர்.
டெத் வேலி தேசிய பூங்காவிற்கு கோடைகாலப் பயணிகள் குளிரூட்டப்பட்ட வாகனத்தில் 10 நிமிட நடைப்பயணத்தில் தங்கியிருக்க வேண்டும், காலை 10 மணிக்குப் பிறகு நடைபயணம் மேற்கொள்ள வேண்டாம், நிறைய தண்ணீர் குடிக்கவும், உப்பு நிறைந்த தின்பண்டங்களை சாப்பிடவும், தொப்பி மற்றும் சன்ஸ்கிரீன் அணியவும் பூங்கா ரேஞ்சர்கள் பரிந்துரைக்கின்றனர்.
Read more ; கிணறு வெட்டும் பணி..!! 3 தொழிலாளர்கள் பரிதாப பலி..!! உறவினர்கள் சந்தேகம்..!!