சுற்றுலா வாகனம் இணையதளத்தில் கட்டாயமாக பதிவு செய்ய வேண்டும்...! ஆட்சியர் முக்கிய உத்தரவு..!
சுற்றுலா வாகனங்களை இணையதளத்தில் கட்டாயமாக பதிவு செய்ய வேண்டும்.
காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் தனது செய்தி குறிப்பில்; தமிழ்நாடு அரசின் சுற்றுலாத்துறை சார்பாக மாநிலத்தில் சுற்றுலா பிரிவுகளின் வளர்ச்சியை மேம்படுத்த பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாக உலக சுற்றுலா தினம் 2023 அன்று சுற்றுலாத் துறை அமைச்சர் அவர்களால் சுற்றுலா வழிகாட்டி நெறிமுறைகள் வெளியிடப்பட்டுள்ளது.
இதில் தமிழ்நாட்டில் செயல்பட்டு வரும் சுற்றுலா வழிகாட்டிகள், சுற்றுலா இயக்குபவர்கள்/பயண முகவர்கள்/சுற்றுலா போக்குவரத்து இயக்குபவர்கள் (Tour Operators/Travel Agents/Tourist Transport Operators அனைவருக்கும் அங்கீகாரம் வழங்கும் பொருட்டு https://www.tntourismtors.com என்ற இணையதளத்தில் கட்டாயமாக பதிவு மேற்கொள்ள வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
எனவே காஞ்சிபுரம் மாவட்டத்திலுள்ள சுற்றுலா வழிகாட்டிகள், சுற்றுலா இயக்குபவர்கள்/பயண முகவர்கள்/சுற்றுலா போக்குவரத்து இயக்குபவர்கள் (Tour Operators/Travel Agents/Tourist Transport Operators) முறையான உரிமம் பெறுவதற்கு மேற்கண்ட இணையதளத்தில் உடனடியாக கட்டாய பதிவுகள் மேற்கொள்ள வேண்டும்.
மேலும் கூடுதல் விவரங்களுக்கு சுற்றுலா அலுவலகம், கோவளம் ரோடு, மாமல்லபுரம், தொலைபேசி எண் 044-27442232, மற்றும் 9176995869 இமெயில்: touristofficermpm@gmail.com என்ற முகவரிக்கு தொடர்பு கொள்ளலாம் என மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.