முக்கிய செய்திகள்தேசிய செய்திகள்மாவட்டம்உலகம்சிறப்பு கட்டுரைகள்சினிமா 360°
ஆரோக்கியமான வாழ்வு | பெண்கள் நலம்
அரசியல்அறிய வேண்டியவைதொழில்நுட்பம்விளையாட்டுஆன்மீகம்வணிகம்
Advertisement

சுற்றுலா போக்குவரத்து ஆபரேட்டர்கள் வாகனத்தை கட்டாயம் பதிவு செய்ய வேண்டும்...! இல்லை என்றால் சிக்கல்...

10:39 AM Dec 24, 2023 IST | 1newsnationuser2
Advertisement

சுற்றுலா போக்குவரத்து ஆபரேட்டர்கள் ஆகியோர்கள் பதிவு செய்வதற்கான வழிகாட்டி நெறிமுறைகள் வெளியிடப்பட்டுள்ளது.

இது குறித்து நாமக்கல் மாவட்ட ஆட்சியர் தனது செய்தி குறிப்பில்; தமிழ்நாடு அரசின் சுற்றுலாத்துறை சார்பாக மாநிலத்தில் சுற்றுலா பிரிவுகளின் வளர்ச்சியை மேம்படுத்த பல்வேறு முயற்சிகளை மேற்கோண்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாக உலக சுற்றுலா தினத்தன்று சுற்றுலா வழிகாட்டிகள், சுற்றுலாப்பயண வழிகாட்டிகள், பயண முகவர்கள், சுற்றுலா போக்குவரத்து ஆபரேட்டர்கள் ஆகியோர்கள் பதிவு செய்வதற்கான வழிகாட்டி நெறிமுறைகள் சுற்றுலாத்துறை அமைச்சர் அவர்களால் வெளியிடப்பட்டுள்ளது.

Advertisement

சுற்றுலா வழிகாட்டுதல்கள் தொழில் சார்ந்த ஆபரேட்டர்களுக்கான மற்றும் பதிவு போர்ட்டலின் நகலினை (https://www.tntourismtors.com) இணையதளம் மூலம் பெற்றுக் கொள்ளலாம். தமிழகத்தில் சுற்றுலா தொழில் முனைவோர்கள் முறையான உரிமம் இல்லாமல் தங்கள் சுற்றுலா தொழில் வணிகத்தை நடத்தி வருகின்றனர். சுற்றுலா தொழில் சார்ந்த ஆபரேட்டர்கள் அரசாணையில் உள்ள வழிகாட்டுதல்களை பற்றி அறிந்திருக்க வேண்டும்.

சுற்றுலா தொழில் முனைவோர்கள் முறையான உரிமம் இல்லாமல் சுற்றுலா சார்ந்த தொழில் நடத்துவது சட்டப்படி குற்றமாகும். ஆகவே உடனடியாக பதிவு செய்யப்பட வேண்டும். தமிழ்நாடு அரசின் சுற்றுலாத்துறையில் சுற்றுலா தொழில் சார்ந்த ஆபரேட்டர்கள் பதிவு செய்வதற்கான இணையதளம் மற்றும் தொடர்பு அலுவலகம் விவரங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இது தொடர்பான தகவல்களை அறிந்து கொள்ள சுற்றுலா அலுவலர், நாமக்கல் அவர்களின் அலுவலக தொலைபேசி எண் 04286-280870 A namakkaltourism@gmail.com என்ற முகவரியில் தொடர்பு கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags :
Bus registerNamakkal dtregistrationTourist
Advertisement
Next Article