Mount Tai | 6,600 படிக்கட்டுகள்.!! ஊர்ந்து செல்லும் சுற்றுலா பயணிகள்.!! 80 லட்சம் பார்வையாளர்களை கடந்த வைரல் வீடியோ.!!
Mount Tai: சீனாவின் தைஷான் பகுதியில் அமைந்துள்ள தாய் மலையில் எடுக்கப்பட்ட வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. இந்த மலையின் 6600 படிக்கட்டுகளை ஏற முடியாமல் சுற்றுலா பயணிகள் மற்றும் பக்தர்கள் திணறும் காட்சிகள் சமூக வலைதளங்களில் கவனத்தை ஈர்த்திருக்கிறது.
சீனாவின் தைஷான் பகுதியில் தாய் மலை(Mount Tai) அமைந்து இருக்கிறது. யுனெஸ்கோவின் உலக பாரம்பரிய தளமான தாய் மவுண்ட் 1,545 மீட்டர் உயரத்தில் உள்ளது. இந்த மலையில் கலாச்சாரம் முக்கியத்துவம் வாய்ந்த தைஷான் கடவுளின் கோயில் பண்டைய தாவோயிஸ்ட் கலைப்பொருட்கள், ஹான் மற்றும் டாங் வம்சங்கள் பண்டைய கல்வெட்டுகள் ஆகியவை அமைந்திருக்கிறது.
இந்த மலையின் உச்சியை அடைவதற்கு 6,600 படிக்கட்டுகள் ஏற வேண்டும். இங்கிருக்கும் கோவிலை தரிசிப்பதற்காகவும் கலாச்சார சின்னங்களை காண்பதற்காகவும் ஏராளமான சுற்றுலா பயணிகள் மற்றும் சாகச விரும்பிகள் பலரும் வருகை புரிகின்றனர். பல்லாயிரக்கணக்கான படிக்கட்டுகளை ஏறுவதற்குள் அவர்களது கால்கள் வலுவிழந்து விடுகின்றன.
இதனால் அவர்களால் சாதாரணமாக நடக்க முடிவதில்லை. இந்த மலையை ஏறுவதற்கு சுற்றுலா பயணிகள் மற்றும் பக்தர்கள் படும் கஷ்டங்களை சமூக வலைதளத்தில் வெளியான வீடியோ காட்டுகிறது. பல ஆயிரம் படிகளைக் கடந்த பிறகு மக்கள் நடக்க முடியாமல் சிரமப்படுவதும் வலுவான அவர்களது கால்கள் நூடுல்ஸ் போல ஆடுவதும் அந்த வீடியோவில் பதிவாகி இருக்கிறது.
மக்கள் தொடர்ந்து படியேறிய பிறகு சிறிது நேரம் ஓய்வெடுத்து மீண்டும் படி ஏற தொடங்குவதும் சிலர் படி ஏற முடியாமல் அழுவதும் வீடியோவில் பதிவாகி இருக்கிறது. நடக்க முடியாமல் இருக்கும் நபர்களை ஸ்ட்ரெச்சர் மூலம் தூக்கிச் செல்லும் காட்சிகளும் பதிவாகி இருக்கின்றன. X தளத்தில் பதிவிடப்பட்ட இந்த வீடியோ 80 லட்சம் பார்வையாளர்களை பெற்று ட்ரெண்டிங்கில் உள்ளது.