For the best experience, open
https://m.1newsnation.com
on your mobile browser.
Advertisement

சுற்றுலா பேருந்து - லாரி மோதி கோர விபத்து!. 24 பேர் பலி!. மெக்சிகோவில் சோகம்!

Tourist Bus - Lorry Collision Accident!. 24 people died! Tragedy in Mexico!
06:38 AM Oct 28, 2024 IST | Kokila
சுற்றுலா பேருந்து   லாரி மோதி கோர விபத்து   24 பேர் பலி   மெக்சிகோவில் சோகம்
Advertisement

Accident: மெக்சிகோவில் சுற்றுலா பேருந்து கட்டுப்பாட்டை இழந்து எதிரே வந்த லாரி மீது மோதி விபத்துக்குள்ளானதில் 24 பே சம்பவ இடத்திலேயே பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Advertisement

வட அமெரிக்க நாடான மெக்சிகோவின் நயாரிட் மாகாணத்தில் இருந்து சுற்றுலா பேருந்து ஒன்று 30க்கும் மேற்பட்ட பயணிகளுடன் சிகுவாகுவா மாகாணத்திற்கு நேற்று புறப்பட்டுச் சென்றது. ஜகாடெகாஸ் மாகாணத்தில் உள்ள பாலத்தில் சென்றபோது அந்த பஸ் திடீரென கட்டுப்பாட்டை இழந்தது. இதனால் எதிரே வந்த லாரி மீது பஸ் மோதி விபத்துக்கு உள்ளானது. இந்த விபத்தில் 24 பேர் உடல் நசுங்கி உயிரிழந்தனர். மேலும், 5 பேர் படுகாயம் அடைந்தனர்.

தகவலறிந்து விரைந்து வந்த போலீசார் படுகாயம் அடைந்தவர்களை மீட்டு அருகில் உள்ள மருத்துவனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர்.இந்த விபத்து குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். சுற்றுலா சென்ற பஸ் விபத்தில் சிக்கி 24 பேர் பலியானது அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது

Readmore: ஷாக்!. இருமடங்காக உயர்ந்த தங்கம் விலை!. தீபாவளிக்குள் ரூ.1 லட்சத்தை எட்டும்?. நிபுணர்கள் கூறுவது என்ன?

Tags :
Advertisement