ஊட்டி, கொடைக்கானலுக்கு டூர் போறீங்களா…! இ-பாஸ் கட்டாயம்…! ஆன்லைனில் விண்ணப்பிப்பது எப்படி?
ஊட்டிக்கு செல்ல மே 7ஆம் தேதி முதல் இ-பாஸ் நடைமுறையை கட்டாயமாக்கி உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இந்நிலையில் ஊட்டி செல்ல எப்படி இ-பாஸ் பெற வேண்டும் என்பது தொடர்பான அறிவிப்பை வெளியிட்டுள்ளார் நீலகிரி மாவட்ட ஆட்சியர் அருணா.
கோடைக்காலத்தை குளிர்ச்சியாக அனுபவிக்க ஏராளமான சுற்றுலாப் பயணிகள் ஊட்டி மற்றும் கொடைக்கானலுக்கு செல்கின்றனர். இதன் காரணமாக ஊட்டி, கொடைக்கானலுக்கு செல்லும் சுற்றுலா பயணிகளுக்கு இ-பாஸ் கட்டாயம் என சென்னை உயர்நீதிமன்றம் அதிரடியாக உத்தரவிட்டது. அதன்படி சுற்றுலா வாகனங்களுக்கு மே 7 முதல் ஜூன் 30 வரை இ-பாஸ் நடைமுறையை அமல்படுத்த அந்தந்த மாவட்ட ஆட்சியர்களுக்கு உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இந்நிலையில் நீலகிரி மாவட்ட ஆட்சியர் அருணா இ-பாஸ் பெறுவது எப்படி? என்பது தொடர்பாக விளக்கமளித்துள்ளார்.
இ-பாஸ் பெறுவது எப்படி? "சாப்ட்வேர் ஒன்று உருவாக்கப்பட்டுள்ளது. இந்த சாப்ட்வேர் என்பது டிஎன்இஜியுடன் இணைந்து உருவாக்கப்பட்டுள்ளது. இதன்மூலம் ஊட்டிக்கு சுற்றுலா, வணிகம், தொழில்முறை சார்ந்து வாகனங்களில் வருபவர்கள் இந்த இ-பாஸ்க்கு விண்ணப்பம் செய் வேண்டும். இப்படி விண்ணப்பம் செய்யும்போது ஆர்டர் ஜெனரேட் ஆகும். அதில் ஒரு க்யூஆர் கோட் இருக்கும். அந்த க்யூஆர் கோட்டை சோதனையில் இருக்கும் அதிகாரிகள் பரிசோதித்து வேலிடா? இல்லையா? என்பதை பார்த்து வாகனங்களை அனுமதிப்பார்கள். இந்த இ-பாஸ் நடைமுறை என்பது ரொம்ப ஈஸியானது. யாராவது வெளிநாடுகளில் இருந்து வந்தால் அவர்கள் இ-மெயில் விபரத்தையும், நம் நாட்டில் உள்ளவர்கள் செல்போன் எண் விபரத்தையும் பயன்படுத்தி தங்களின் சுயவிபரங்களை பதிவிட்டால் போதும். எங்கிருந்து வருகிறோம் என்பதையும், எந்த தேதியில் இருந்து எந்த தேதி வரை ஊட்டியில் இருப்பார்கள், எந்த இடத்தில் தங்க உள்ளனர் என்பதை குறிப்பிட வேண்டும்.மேலும் பயணிக்கும் வாகனம் காரா, பஸ்ஸா, வேனா என்பதையும், வாகனத்தில் எத்தனை பேர் பயணம் செய்ய உள்ளனர்கள் என்பதையும் குறிப்பிட்டால் போதும் இ-பாஸ் ஜெனரேட் ஆகிவிடும்.
மேலும் ஆன்லைனில் விண்ணப்பம் செய்யும் அனைவருக்கும் இ-பாஸ் வழங்கப்படும். இந்த இ-பாஸ் நடைமுறையில் எத்தனை பேர் என்பது கணக்கில் எடுத்து கொள்ளப்படாது. வாகனங்களுக்கான இ-பாஸ் பதிவு நடைமுறை மட்டுமே கணக்கில் எடுத்து கொள்ளப்பட உள்ளது. ஒவ்வொரு வாகனங்களுக்கும் இ-பாஸ் வழங்கப்படும். பேருந்தில் வருபவர்களுக்கு இ-பாஸ் தேவையில்லை'' என்று நீலகிரி மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.
Read More: உஷார்..!! இந்தப் பிரச்சனை உள்ளவர்கள் இதை மட்டும் குடிச்சிறாதீங்க..!! ஆபத்து உங்களுக்கு தான்..!!