மொத்தம் 8,283 காலியிடங்கள்... வெளியான SBI தேர்வு முடிவுகள்...! எப்படி பார்ப்பது...?
ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியாவில் 8,283 கிளார்க் பணியிடங்களுக்கு நடைபெற்ற தேர்வு முடிவுகள் வெளியாகியுள்ளது.
ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியாவில் 8,283 கிளார்க் பணியிடங்களுக்கு நடைபெற்ற தேர்வு முடிவுகள் வெளியாகியுள்ளது. முதற்கட்டத் தேர்வுகள் ஜனவரி 5, 6, 11 மற்றும் 12 ஆகிய தேதிகளில் நடைபெற்ற நிலையில், மெயின் தேர்வுகள் பிப்ரவரி 25, மார்ச் 4 மற்றும் ஜூன் 9-ம் தேதி நடைபெற்றது. தேர்வு முடிவுகளை sbi.co.in என்ற இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.
குஜராத், ஆந்திர பிரதேசம், கர்நாடகா, லடாக், தமிழ்நாடு,புதுச்சேரி, தெலங்கானா, மேற்கு வங்காளம், சிக்கிம், அசாம், மிசோரம், திரிபுரா,பீகார், கேரளா உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் உள்ள வங்கிக் கிளைகளில் இந்த வேலைவாய்ப்பின் மூலம் தகுதியான நபர் தேர்வு செய்யப்பட உள்ளனர்.
தேர்வு முடிவுகள் எப்படி பார்ப்பது..?
தேர்வர்கள் sbi.co.in என்ற இணைப்பை க்ளிக் செய்து தேவையான தகவல்களை பூர்த்தி செய்து தேர்வு முடிவுகளை காணலாம். பதிவு எண் (Registration Number/ Roll Number') பிறந்த தேதி (Date of Birth) உள்ளிட்ட விவரங்களை பூர்த்தி செய்து தேர்வு முடிவுகளை தரவிறக்கம் செய்யலாம். தேர்வர்கள் தங்கள் முடிவுகளில் ஏதேனும் முரண்பாடுகளைக் கண்டாலோ அல்லது அவற்றைப் பற்றி ஏதேனும் கேள்விகள் இருந்தாலோ உடனடியாக சம்பந்தப்பட்ட அதிகாரிகளை 022-22820427 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.