சூப்பர் எலக்ட்ரிக் பைக்.! 180 கிலோமீட்டர் மைலேஜ்.!105 கிலோமீட்டர் டாப் ஸ்பீடு.! சிறப்பு அம்சங்கள் ஒரு பார்வை.!
பெட்ரோல் விலை அதிகரித்த பின்பு எலக்ட்ரிக் மோட்டார் சைக்கிள்களின் வருகை நாட்டில் அதிகமாக இருக்கிறது. பெரும்பாலும் எலக்ட்ரிக் ஸ்கூட்டர்கள் அறிமுகப்படுத்தப்பட்டு வந்த நிலையில் டார்க் போன்ற ஒரு சில பெரிய நிறுவனங்கள் எலக்ட்ரிக் மோட்டார் பைக்குகளையும் அறிமுகப்படுத்தியது. இந்த நிறுவனம் ஒரு முறை சார்ஜ் செய்தால் 180 கிலோமீட்டர் பயணிக்க கூடிய வகையில் புதிய மோட்டார் சைக்கிளை வடிவமைத்து இருக்கிறது.
டார்க் நிறுவனம் தற்போது மார்க்கெட்டில் இருக்கும் Tarque kratos R(டார்க் க்ராடோஸ் ஆர்) ரக மோட்டார் சைக்கிள்களை புதிய வடிவமைப்புடன் நவீன வசதிகளுடனும் மீண்டும் அறிமுகப்படுத்தி இருக்கிறது. இந்த எலக்ட்ரிக் பைக்கில் 4 Kwh செயல் திறன் கொண்ட லித்தியம் பேட்டரி பயன்படுத்தப்பட்டிருக்கிறது. மேலும் இவற்றுடன் 9 Kwh ஆக்சியல் பிளக்ஸ் மோட்டார் இணைக்கப்பட்டுள்ளது. இவை இணைந்து 96Nm செயல் திறனை உருவாக்குகிறது. இதன் காரணமாக ஒருமுறை சார்ஜ் செய்தால் 180 கிலோமீட்டர் பயணிக்கலாம் என டார்க் நிறுவனம் அறிவித்துள்ளது.
டார்க் க்ராடோஸ் ஆர் ரக பைக்குகள் ஈகோ சிட்டி மற்றும் ஸ்போர்ட்ஸ் வகை மூடிகளுடன் இதற்கு முன்பு அறிமுகப்படுத்தப்பட்டிருந்தது. இது பயனாளிகளுக்கு திருப்தி அளிக்க கூடிய வகையில் இல்லை என்பதால் புதிய ரக எலக்ட்ரிக் பைக்கில் ஈகோ ப்ளஸ் என்ற புதிய ரக மோட் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இதன் மூலம் வாகனத்தை ஒரே சீராக 35 கிலோமீட்டர் வேகத்தில் இயக்க முடியும். இது நகரங்களுக்குள் பயணிப்பவர்களுக்கு சிறப்பான வசதியாக இருக்கிறது.
இந்த எலக்ட்ரிக் பைக்குகள் ஈகோ பிரண்ட்லி முறையை பயன்படுத்தி 120 கிலோமீட்டர் பயணிக்க முடியும். மேலும் சிட்டி மோடில் 100 கிலோமீட்டர் வரையிலும் ஸ்போர்ட்ஸ் மோடில் 70 கிலோமீட்டர் வரை பயணிக்கலாம் என டார்க் நிறுவனம் அறிவித்திருக்கிறது. இந்த வாகனத்தின் அதிகபட்ச வேகம் மணிக்கு 15 கிலோமீட்டர் எனவும் அந்த நிறுவனம் தெரிவித்துள்ளது. இந்த வாகனத்தை சீரோ பேட்டரியில் இருந்து சார்ஜ் செய்ய 6 முதல் 8 மணி நேரங்கள் ஆகும்.
மேலும் ஸ்டார்ட் செய்த 35 வினாடிகளில் நாற்பது கிலோமீட்டர் வேகத்தை எட்டும் திறன் கொண்டது. டார்க் நிறுவனம் இந்த பைக்கிற்கு நாற்பதாயிரம் கிலோமீட்டர் வாகன கேரண்டியும் வழங்குகிறது. இந்த பைக்கின் எக்ஸ் ஷோரூம் விலை 2,09,999 ஆகும். இந்த விலையானது மாநிலங்களின் அடிப்படையில் மாறுபடலாம்.