உணவில், மஞ்சளை அதிகம் சேர்க்க வேண்டாம்!!! மஞ்சளால் ஏற்படும் ஆபத்து குறித்து கட்டாயம் தெரிந்து கொள்ளுங்கள்...
மஞ்சள் தூள், மசாலா என்பதை தாண்டி, இது ஒரு நல்ல மருந்தாக கருதப்படுகிறது. பாரம்பரிய மருத்துவத்தில் மஞ்சள் தூளுக்கு தான் அதிக முக்கியத்துவம் கொடுக்கப்பட்டது. உடலுக்கு அத்தியாவசியமான சத்துக்கள் மஞ்சள் தூளில் உள்ளது. இது ஒரு நல்ல ஆன்டிசெப்டிக். உடலில் ஏற்படும் பிரச்சனைகளை தீர்க்கக்கூடிய ஊட்டச்சத்து மூலக்கூறுகள் மஞ்சளில் உள்ளது. ஆனால் மஞ்சளை எடுத்துக் கொள்வதாலேயே உடலில் உள்ள பிரச்சனைகள் தீர்ந்துவிடாது. மாறாக, மஞ்சளை உணவில் அதிகம் சேர்த்துக் கொண்டால் பக்கவிளைவுகள் ஏற்படும். மஞ்சளை, பரிந்துரைக்கப்பட்ட அளவில் மட்டுமே எடுத்துக்கொள்ள வேண்டும்.
மஞ்சள், பித்த உற்பத்தியை அதிகரிப்பதோடு, வயிற்றில் அமில அளவை அதிகரிக்கும். ஆயுர்வேத மருத்துவத்தில், அதிகப்படியான மஞ்சள் எடுத்துக்கொண்டால் செரிமான பிரச்சனைகள் ஏற்படும் என கூறப்பட்டுள்ளது. இது இரைப்பை உணவுக்குழாய் ரிஃப்ளக்ஸ் நோய் (GERD), அமில ரிஃப்ளக்ஸ் அல்லது பிற இரைப்பை குடல் கோளாறுகள் உள்ளவர்களை அதிகம் பாதிக்க்கும் அபாயம் உள்ளது. அதிகப்படியான மஞ்சளை நாம் உணவில் சேர்த்துக்கொண்டால், மஞ்சளில் உள்ள ஆக்சலேட்டுகள் சிறுநீரக கற்களை உருவாக்கிவிடும். மஞ்சள், குறிப்பாக அதன் செயலில் உள்ள குர்குமின் கலவை, உடலில் இரும்பு உறிஞ்சுதலைத் தடுக்கும். Agricultural and Food Chemistry இதழில் வெளியிடப்பட்ட ஒரு ஆய்வின்படி, மஞ்சளை அதிக அளவு எடுத்துக்கொண்டால், இரும்புச்சத்து குறைபாடு, இரத்த சோகை ஏற்படும்.
ஆய்வுகளின்படி, ஒரு நாளைக்கு 500 முதல் 2,000 மி.கி மஞ்சள் எடுத்துக் கொள்வது மட்டுமே ஆரோக்கியத்துக்கு நல்லது. அதுவும் உடல்நல பிரச்சனைகள் இருப்பவர்கள் மருத்துவர்கள் ஆலோசனை பெற்றுக் கொள்வது நல்லது. வெறுமனே மஞ்சள் சாப்பிடாமல், பரிந்துரைக்கப்பட்ட அளவு மஞ்சளை உணவில் சேர்த்து சமைத்து சாப்பிடலாம்.
Read more: கவனம்… குடிக்க ஜூஸ் கொடுத்து, சிறுமி பலாத்காரம்!!!