For the best experience, open
https://m.1newsnation.com
on your mobile browser.
Advertisement

கொலஸ்ட்ரால் அதிகரித்தால் இரண்டு காதுகளும் கேட்காதா..? இந்த அறிகுறிகளை அசால்டா விட்டுடாதீங்க..! - மருத்துவர்கள் எச்சரிக்கை

Too much cholesterol can also affect your hearing.
10:39 AM Nov 26, 2024 IST | Mari Thangam
கொலஸ்ட்ரால் அதிகரித்தால் இரண்டு காதுகளும் கேட்காதா    இந்த அறிகுறிகளை அசால்டா விட்டுடாதீங்க      மருத்துவர்கள் எச்சரிக்கை
Advertisement

நம் உடல் சரியான முறையில் இயங்குவதற்கு கொலஸ்ட்ரால் என்ற கொழுப்பு மிகவும் அவசியம். எனினும், அதிகப்படியான கெட்ட கொலஸ்ட்ரால் இருப்பது இதய நோய் மற்றும் பக்கவாதம் போன்ற பிரச்சனைகளை உண்டாக்கலாம். இது போன்ற பிரச்சனைகளை ஏற்படுத்தும் அதிக கொலஸ்ட்ரால் பெரும்பாலும் எந்த ஒரு எச்சரிக்கை அறிகுறிகளையும் காட்டாமல் சைலன்டாக இருந்து தனது வேலையை சாதித்துக் கொள்கிறது. எனினும், ஒரு சில சமயங்களில் அதிக கொலஸ்ட்ரால் காரணமாக படிப்படியாக காது கேளாமை ஏற்படுகிறது. இது இரண்டு காதுகளையும் சமமாக பாதிக்கிறது என்று நிபுணர்கள் கூறுகின்றனர்.

Advertisement

அதிக கொலஸ்ட்ரால் இருப்பதால் ஏற்படக்கூடிய காது கேளாமை பிரச்சனை பொதுவாக உரத்த ஒலி அல்லது இரைச்சல் மிகுந்த சூழலில் காது கேட்பதில் சிக்கல் ஏற்படுவதில் இருந்து துவங்குகிறது. இதற்கு சிகிச்சை அளிக்காமல் விட்டுவிட்டால் நிரந்தரமாக காது கேட்காமல் போக வாய்ப்புள்ளது. கொலஸ்ட்ரால் நமது தமனிகளில் படிப்படியாக படிவதன் காரணமாக அதிக கொலஸ்ட்ரால் கேட்கும் திறனை பாதிக்கிறது. தமனிகளை சுருங்க செய்து காதுகளின் செயல்பாடுகளுக்கு தேவையான ரத்த ஓட்டத்தை தடுக்கிறது.

சரியான நேரத்தில் சரியான மருத்துவ கவனிப்பு வழங்கப்படாவிட்டால் கடுமையானதாக இருக்கலாம். மருத்துவ நிபுணர்களின் கூற்றுப்படி, அதிக கொலஸ்ட்ரால் ஏற்படும் காது கேளாமை பெரும்பாலும் ஏற்படுகிறது. அதிக கொலஸ்ட்ரால் படிப்படியாக செவித்திறன் இழப்பை ஏற்படுத்தும், இது அடிக்கடி இரண்டு காதுகளையும் சமமாக பாதிக்கிறது. இந்த எச்சரிக்கை அறிகுறி, பொதுவாக அதிக ஒலி எழுப்பும் சத்தங்களைக் கேட்பது அல்லது சத்தமில்லாத சூழலில் பேச்சைப் புரிந்துகொள்வது போன்ற பிரச்சனையாக வெளிப்படுகிறது. சிகிச்சையளிக்கப்படாவிட்டால், அது காலப்போக்கில் மோசமடையக்கூடும்.

கொலஸ்ட்ராலை குறைக்க இந்த உணவுகளை தவிர்க்க வேண்டும் : கெட்ட கொலஸ்ட்ரால் அளவுகளை அதிகரிக்கும் அல்லது குறைக்கும் தன்மை, நாம் சாப்பிடும் உணவுகளுக்கு உண்டு. கொலஸ்ட்ராலைக் குறைப்பதற்கு நாம் ஒரு சில உணவுகளை தவிர்க்க வேண்டும். அவற்றில் கேக், பிஸ்கட், சாசேஜ்கள் மற்றும் கொழுப்பு நிறைந்த இறைச்சி போன்றவை அடங்கும். அது மட்டுமல்லாமல் தேங்காய் எண்ணெய் அல்லது பாமாயில் போன்ற எண்ணெய்களையும் ஒருவர் தவிர்க்க வேண்டும். பேக்கேஜ் செய்யப்பட்ட உணவுகளைத் தவிர்க்க வேண்டும். உங்களுக்கு அதிக கொலஸ்ட்ரால் இருந்தால் நெய், வெண்ணெய், கிரீம், சீஸ் போன்ற கொழுப்பு நிறைந்த உணவுப் பொருட்களை தவிர்த்து விடவும்.

Read more ; கனமழை எதிரொலி..!! டெல்டா மாவட்டங்களில் பேருந்துகள் இயங்காதா..? தீயாய் பரவும் தகவல்..!! உண்மை என்ன..?

Tags :
Advertisement