முக்கிய செய்திகள்தேசிய செய்திகள்மாவட்டம்உலகம்சிறப்பு கட்டுரைகள்சினிமா 360°
ஆரோக்கியமான வாழ்வு | பெண்கள் நலம்
அரசியல்அறிய வேண்டியவைதொழில்நுட்பம்விளையாட்டுஆன்மீகம்வணிகம்
Advertisement

சென்னையில் நாளை (அக்.25) மாபெரும் வேலைவாய்ப்பு முகாம்..!! இளைஞர்களே மிஸ் பண்ணிடாதீங்க..!!

Collector Rashmi Siddharth Jagade has announced that all employment and vocational guidance centers in Chennai will conduct a private sector employment camp tomorrow (October 25).
07:08 AM Oct 24, 2024 IST | Chella
Advertisement

சென்னையில் உள்ள அனைத்து வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையங்களும் இணைந்து நாளை (அக்.25) தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் நடத்த உள்ளதாக ஆட்சியர் ரஷ்மி சித்தார்த் ஜகடே அறிவித்துள்ளார்.

Advertisement

தமிழ்நாட்டில் உள்ள அனைத்து மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில் நெறி வழிகாட்டு மையங்களிலும் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம்கள் நடத்தப்பட்டு வருகின்றன. இதன் மூலம் வேலைவாய்ப்பற்ற இளைஞர்களுக்கு வேலை வழங்கப்படுகின்றன. அந்த வகையில், சென்னையில் உள்ள அனைத்து வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையங்களும் இணைந்து நாளை (அக்.25) தனியார் துறை வேலைவாய்ப்பு முகாமினை நடத்தவுள்ளன.

இந்த முகாம் சென்னை கிண்டி, ஆலந்தூர் சாலையில் உள்ள ஒருங்கிணைந்த வேலைவாய்ப்பு அலுவலக வளாகத்தில் உள்ள மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் நடைபெறும். காலை 10 மணி முதல் மதியம் 2 மணி வரை நடைபெறவுள்ளது. இந்த முகாமில் 8, 10, 12ஆம் வகுப்பு, ஐ.டி.ஐ, டிப்ளமோ, கலை, அறிவியல் மற்றும் தொழில்நுட்ப பிரிவில் ஏதாவது ஒரு பட்டம் (டிகிரி) ஆகிய கல்வித்தகுதியை உடைய அனைவரும் பங்கேற்கலாம்.

இந்த முகாமில் 20-க்கும் மேற்பட்ட தனியார் துறை நிறுவனங்கள் கலந்து கொள்கின்றனர். இம்முகாம் வாயிலாக பணி நியமனம் பெறும் இளைஞர்களின் வேலைவாய்ப்பு பதிவு இரத்து செய்யப்படமாட்டாது. வேலையளிக்கும் நிறுவனங்களும், வேலைதேடும் இளைஞர்களும் இம்முகாமில் கலந்து கொள்ள எந்தவித கட்டணமும் செலுத்த வேண்டியதில்லை. இந்த முகாமில் கலந்து கொள்ளும் நிறுவனங்களும், வேலைநாடுநர்களும் www.tnprivatejobs.tn.gov.in என்ற இணையதளத்தில் பதிவேற்றம் செய்ய வேண்டும். இந்த முகாமினை இளைஞர்கள் பயன்படுத்திக் கொள்ளுமாறு சென்னை ஆட்சியர் ரஷ்மி சித்தார்த் ஜகடே அறிவித்துள்ளார்.

Read More : இந்த திட்டத்தில் இணைந்தால் லட்சங்களை அள்ளலாம்..!! அதுவும் எத்தனை ஆண்டுகளில் தெரியுமா..?

Tags :
ஆட்சியர்இளைஞர்கள்சென்னைதனியார் துறைவேலைவாய்ப்பு முகாம்
Advertisement
Next Article