முக்கிய செய்திகள்தேசிய செய்திகள்மாவட்டம்உலகம்சிறப்பு கட்டுரைகள்சினிமா 360°
ஆரோக்கியமான வாழ்வு | பெண்கள் நலம்
அரசியல்அறிய வேண்டியவைதொழில்நுட்பம்விளையாட்டுஆன்மீகம்வணிகம்
Advertisement

கவனம்...! நாளை தான் கடைசி நாள்...! ஆசிரியர்கள் உடனே இதை செய்து முடிக்க வேண்டும்...!

06:20 AM Feb 16, 2024 IST | 1newsnationuser2
Advertisement

தமிழக பள்ளிக் கல்வியில் 11, 12-ம் வகுப்புக்கான பொதுத்தேர்வு மார்ச் 1 முதல் 25-ம் தேதி வரை நடத்தப்பட உள்ளது. அதற்குமுன் மாணவர்களுக்கான செய்முறைத் தேர்வுகள் பிப்ரவரி 12 முதல் 24-ம் தேதிக்குள் நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது.

Advertisement

அதன்படி 12-ம் வகுப்புக்கு பிப்ரவரி 12 முதல் 17-ம் தேதி வரையும், 11-ம் வகுப்புக்கு பிப்ரவரி 19 முதல் 24-ம் தேதி வரையும் செய்முறை தேர்வு நடத்தி முடிக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து மாணவர்களின் செய்முறைத் தேர்வு மதிப்பெண்களை பதிவுசெய்வதற்கான வெற்று மதிப்பெண் பட்டியலை பள்ளிகளின் தலைமையாசிரியர்கள் நாளை மாலை வரை தேர்வுத் துறை வலைதளத்தில் (http://www.dge.tn.gov.in/) இருந்து பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

மேலும் அதில், குறிப்பிட்ட கால அவகாசத்துக்குள் மாணவர்களின் செய்முறை மதிப்பெண் விவரங்களை பூர்த்தி செய்து மாவட்ட தேர்வுத்துறை அலுவலகங்களில் சமர்ப்பிக்க வேண்டும். தேர்வின் போது மாற்றுத் திறனாளி மாணவர்களுக்கான சலுகைகள் வழங்கப்பட வேண்டும். செய்முறை தேர்வுக்கான புறத்தேர்வாளராக பிற பள்ளிகளின் ஆசிரியர்களை தான் நியமிக்க வேண்டும்.

Advertisement
Next Article