For the best experience, open
https://m.1newsnation.com
on your mobile browser.
Advertisement

விவசாயிகள் பயிர் காப்பீடு செய்ய நாளை தான் கடைசி நாள்....! உடனே இ-சேவை மையம் மூலம் பதிவு செய்ய வேண்டும்...!

07:23 AM Nov 21, 2023 IST | 1newsnationuser2
விவசாயிகள் பயிர் காப்பீடு செய்ய நாளை தான் கடைசி நாள்      உடனே இ சேவை மையம் மூலம் பதிவு செய்ய வேண்டும்
Advertisement

விவசாயிகள் நடப்பு 2023-2024ஆம் ஆண்டில், சம்பா நெற்பயிர் காப்பீடு செய்ய நாளை கடைசி நாள்.

இது குறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில்; சம்பா, தாளடி, பிசானம் நெற்பயிர் காப்பீட்டுக்கான கடைசி தேதியை நீட்டிக்க வேண்டும் என்ற விவசாயிகளின் கோரிக்கைக்கிணங்க, விடுபட்ட விவசாயிகளும் இத்திட்டத்தின் கீழ் பயன்பெற வேண்டும் என்ற நோக்கத்துடன், தமிழ்நாடு அரசால் எடுக்கப்பட்ட தொடர்முயற்சியால் சம்பா/ தாளடி/ பிசானம் நெற்பயிர் காப்பீட்டுக்கான கடைசி தேதியை 22.11.2023 வரை நீட்டித்து ஒன்றிய அரசு ஒப்புதல் வழங்கியுள்ளது.

Advertisement

பொது சேவை மையங்கள் மூலம் அரியலூர், செங்கல்பட்டு, கடலூர், தருமபுரி, ஈரோடு, கள்ளக்குறிச்சி, காஞ்சிபுரம், கரூர், மதுரை, மயிலாடுதுறை, நாகப்பட்டினம், பெரம்பலூர், புதுக்கோட்டை, இராமநாதபுரம், இராணிப்பேட்டை, சேலம், சிவகங்கை, தஞ்சாவூர், தேனி, திருச்சி, திருப்பத்தூர், திருப்பூர், திருவள்ளூர், திருவண்ணாமலை, திருவாரூர், வேலூர் மற்றும் விழுப்புரம் ஆகிய மாவட்டங்களில் உள்ள விவசாயிகள் சம்பா நெற்பயிரைக் காப்பீடு செய்யாதவர்கள் உரிய ஆவணங்களுடன் நாளை மாலைக்குள் பதிவு செய்ய வேண்டும் . நிர்ணயம் செய்யப்பட்ட காலக்கெடுவுக்குள் ஏற்கெனவே பதிவு செய்த விவசாயிகள் மீண்டும் பதிவு செய்ய வேண்டாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement