கிடுகிடுவென உயர்ந்த தக்காளி விலை.. அதிர்ச்சியில் இல்லத்தரசிகள்.. ஒரு கிலோ எவ்வளவு தெரியுமா?
தமிழகத்தில் கடுமையான வெயில் கொளுத்தி வந்த நிலையில் ஏப்ரல் மே மாதத்தை விட செப்டம்பர் அக்டோபரில் வெயிலின் தாக்கம் மிக அதிகமாக இருக்கிறது. அவ்வப்போது மழை பெய்து வந்தாலும் விவசாயத்திற்கு எதிர்பார்த்த மழை அளவு இல்லை. இதனால் போதிய அளவு காய்கறி உற்பத்தி இல்லாததால் புகழ்பெற்ற திண்டுக்கல், ஒட்டன்சத்திரம் மற்றும் சென்னை கோயம்பேடு காய்கறி சந்தைகளுக்கு காய்கறி வரத்து வெகுவாக சரிந்துள்ளது.
சமையலுக்கு எந்த காய்கறிகளும் இல்லாமல் சமைத்து விடலாம் ஆனால் தக்காளி இல்லாத உணவு சமைப்பது இல்லத்தரசிகளுக்கு சிரமமான வேலை, அந்த வகையில் தக்காளி விலை உயர்வு பொதுமக்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. கடந்த வாரங்களில் தக்காளி விலை 30 முதல் 40 ரூபாய் வரை இருந்த நிலையில் படிப்படியாக விலை உயர்ந்து தற்பொழுது ஒரு கிலோ தக்காளி விலை மொத்தம் விற்பனையில் 65 ரூபாய் வரை உள்ளது.
கோயம்பேடு மொத்த விற்பனை சந்தையில் முதல் தர தக்காளி 65 ரூபாய் வரை விற்பனை செய்யப்படுகிறது. கோயம்பேடு சில்லறை சந்தையில் 70 முதல் 80 ரூபாய் வரை விற்பனை செய்யப்படுகிறது. ஒரு கிலோ பெரிய வெங்காயம் 55 ரூபாய்க்கும், ஒரு கிலோ பீன்ஸ் 110 ரூபாய்க்கும், சின்ன வெங்காயம் ஒரு கிலோ 70 ரூபாய்க்கும் மொத்த விற்பனையில் விற்பனை செய்யப்படுகிறது. காய்கறி சந்தையில் இருந்து தக்காளியை வாங்கிச் சென்று கடைகளில் விற்பனை செய்யும் வியாபாரிகள் 90 ரூபாய் முதல் 95 ரூபாய் வரை விற்பனை செய்கின்றனர். இதனால் இல்லதரசிகள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
Read more ; WT20 WC!. இன்று இந்தியா- நியூசிலாந்து அணிகள் மோதல்!