வாகன ஓட்டிகளே... ஆண்டு தோறும் சுங்க கட்டணம் மாற்றி அமைக்கப்படும்...! மத்திய அரசு தகவல்...!
நெடுஞ்சாலை கட்டண விதிகள் படி பயனர் கட்டணம் ஒவ்வொரு ஆண்டும் மாற்றி அமைக்கப்படுகிறது என மத்திய அரசு தெரிவித்துள்ளது.
தேசிய நெடுஞ்சாலை கட்டண விதிகள், 2008, விதி 5-ன்படி, பயனர் கட்டணம் ஒவ்வொரு ஆண்டும் மாற்றியமைக்கப்படுகிறது. அதன்படி, கடந்த ஐந்து ஆண்டுகளில், பயனர் கட்டண விகிதங்கள் ஐந்து முறை மாற்றியமைக்கப்பட்டுள்ளன. 2023-24 நிதியாண்டில், இந்திய தேசிய நெடுஞ்சாலைகள் ஆணையத்தின் கீழ் செயல்படும் தேசிய நெடுஞ்சாலை கட்டண வசூலிப்பு இடங்களில் மொத்தக் கட்டண வசூல் ரூ. 54,811.13 கோடியாகும். 2023-24 நிதியாண்டு முதல் பயனர் கட்டண விகிதங்களில் சராசரி அதிகரிப்பு 2.55% ஆக இருக்கும். இதனால் முந்தைய வசூல் தொகையில் சுமார் 1400 கோடி ரூபாய் அதிகரிக்கலாம்.
பாலங்கள் உட்பட அனைத்து தேசிய நெடுஞ்சாலை பிரிவுகளின் பராமரிப்பு மற்றும் பழுதுபார்ப்பை, பொறுப்பான பராமரிப்பு முகமை மூலம் உறுதி செய்வதற்கான நடைமுறையை அமைச்சகம் உருவாக்கியுள்ளது. தேசிய நெடுஞ்சாலைப் பகுதிகளில், ஒப்பந்த பராமரிப்பு மூலம் பராமரிப்பு பணிகளை மேற்கொள்ள, அமைச்சகம் கொள்கை முடிவு எடுத்துள்ளது.
இது செயல்திறன் அடிப்படையிலான பராமரிப்பு ஒப்பந்தம் (PBMC) அல்லது குறுகிய கால பராமரிப்பு ஒப்பந்தம் (STMC) என இரண்டில் ஒன்று என தேசிய நெடுஞ்சாலைகளில் எந்தப் பிரிவும் பொறுப்பேற்கக்கூடிய ஒப்பந்த பராமரிப்பு முகமை இல்லாமல் இருக்கக்கூடாது. கடந்த ஆண்டில் தேசிய நெடுஞ்சாலைகளை பராமரிப்பதற்காக அமைச்சகம் ரூ.6,523 கோடி செலவிட்டுள்ளது என மத்திய அரசு தெரிவித்துள்ளது.