முக்கிய செய்திகள்தேசிய செய்திகள்மாவட்டம்உலகம்சிறப்பு கட்டுரைகள்சினிமா 360°
ஆரோக்கியமான வாழ்வு | பெண்கள் நலம்
அரசியல்அறிய வேண்டியவைதொழில்நுட்பம்விளையாட்டுஆன்மீகம்வணிகம்
Advertisement

நோட்...! விவசாயிகள் புகார் தெரிவிக்க கட்டணமில்லா தொலைபேசி எண்...! தமிழக அரசு அசத்தல்...

07:00 AM Jan 26, 2024 IST | 1newsnationuser2
Advertisement

நெல் கொள்முதல் தொடர்பாக விவசாயிகள் புகார் தெரிவிக்கும் பொருட்டு கட்டணமில்லா தொலைபேசி எண்.

இது குறித்து விவசாயத்துறை அமைச்சர் தனது செய்தி குறிப்பில்; காவிரி மாவட்டங்களான தஞ்சாவூர், திருவாரூர், கடலூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை ஆகிய ஐந்து மாவட்டங்களிலும் 957 நெல் கொள்முதல் நிலையங்கள் திறக்க ஒப்புதல் அளிக்கப்பட்டு 195 நெல் கொள்முதல் நிலையங்களில் நெல் கொள்முதல் நடைபெற்று வருகிறது. விவசாயிகள் தங்கள் நெல்லை எப்போது கொண்டு வந்தாலும் கொள்முதல் செய்ய இவை தயார் நிலையில் உள்ளன.

Advertisement

12 ஆண்டுகளுக்குப் பிறகு முதலமைச்சர் அவர்கள் மாநில அரசு வழங்கும் ஊக்கத்தொகையை உயர்த்தி வழங்க ஆணையிட்டுத் தற்போது நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் குவிண்டால் ஒன்றிற்கு சன்னரக நெல்லுக்கு மாநில அரசின் பங்களிப்பு ரூ.107/- ம் சேர்த்து ரூ.2.310 க்கும், பொதுரக நெல் குவிண்டால் ஒன்றிற்கு மாநில அரசின் பங்களிப்பு ரூ.82/- ம் சேர்த்து ரூ.2,265/- க்கும் கொள்முதல் செய்யப்படுகிறது.

நெல் கொள்முதல் தொடர்பாக விவசாயிகள் புகார் தெரிவிக்கும் பொருட்டு கட்டணமில்லா தொலைபேசி எண் (உழவர் உதவி மையம்) 1800 599 3540 மற்றும் தொடர்பு கொள்ள வேண்டிய துறை உயர் அலுவலர்களின் அலைபேசி எண்கள் கொண்ட அறிவிப்புப் பதாகையும் புகார் பெட்டியும் ஒவ்வொரு நெல் கொள்முதல் நிலையத்திலும் வைக்கப்பட்டுள்ளன.

இந்நிலையில் நேற்று அரசியல் கட்சி ஒன்றின் தலைவர் தன் டிவிட்டர் பக்கத்தில் நெல் கொள்முதல் நிலையங்கள் சரியாகத் திறக்கப்படுவதில்லை என்று பதிவிட்டுள்ளார். ஏற்கனவே வழங்கப்பட்டுள்ள அறிவுரைகளின் படி தேவைப்படும் இடங்களில் நெல்கொள்முதல் நிலையங்கள் உடனுக்குடன் திறந்து நெல் கொள்முதல் செய்யப்படும் விவரம் அந்தந்தப் பகுதி நெல் விவசாயிகளுக்கு நன்றாகத் தெரிந்திருக்கும்.

காவிரிப் பாசன மாவட்ட ஆட்சி தலைவர்களின் கூட்டத்திலும் நெல் கொள்முதல் நிலையங்களைத் தேவைப்படும் இடங்களில் விரைந்து திறந்து நெல் கொள்முதல் செய்திட மாவட்ட ஆட்சியர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

Advertisement
Next Article