குடும்ப அட்டைதாரர்களுக்கு டோக்கன்..!! ரூ.2 ஆயிரத்தை மிஸ் பண்ணிடாதீங்க..!!
ஃபெஞ்சல் புயலால் பாதிக்கப்பட்ட 3 மாவட்டங்களின் குடும்ப அட்டைதாரா்களுக்கு தலா ரூ.2,000 வழங்கும் பணி தொடங்கியுள்ளது.
ஃபெஞ்சல் புயலால் விழுப்புரம், கள்ளக்குறிச்சி, கடலூா் மாவட்டங்கள் மிக அதிக பாதிப்புகளைச் சந்தித்துள்ளன. அதேபோல திருவண்ணாமலை, தருமபுரி, கிருஷ்ணகிரி மாவட்டங்களின் சில பகுதிகளில் மழையளவு வழக்கத்தைவிட அதிகமாக இருந்தது. முதற்கட்டமாக அதி கனமழை பெய்த விழுப்புரம், கடலூா், கள்ளக்குறிச்சி மாவட்டங்களில் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு, குடும்ப அட்டை அடிப்படையில் தலா ரூ.2,000 வழங்கப்படும் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்தார்.
இந்நிலையில், 3 மாவட்டங்களிலும் நிவாரணத் தொகை வழங்கும் பணிகள் தொடங்கியுள்ளது. அந்த வகையில், கள்ளக்குறிச்சி மாவட்டம் திருக்கோவிலூரில் முதற்கட்டமாக 159 குடும்ப அட்டைதாரர்களுக்கு ரூ.2,000 மற்றும் நிவாரண பொருட்களை அமைச்சர் பொன்முடி வழங்கினார். மேலும், ரேஷன் கடைகளில் நிவாரணத் தொகைக்கான டோக்கன்கள் வழங்கப்பட்டு வருகிறது.
அடுத்த 3 நாட்களுக்குள் நிவாரணத் தொகை வழங்கப்படும் என்று வருவாய்த்துறை முதன்மைச் செயலர் அமுதா தெரிவித்துள்ளார். மேலும், புயலால் பாதிக்கப்பட்ட திருவண்ணாமலை, தருமபுரி, கிருஷ்ணகிரி ஆகிய மாவட்டங்களும் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ளன. இங்கு நிவாரணத் தொகை வழங்குவது குறித்து விரைவில் அறிவிப்பு வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
Read More : பெண்களே..!! உடல் பிரச்சனைகளை சரிசெய்யும் நகைகள்..!! இவ்வளவு நன்மைகளா..?