முக்கிய செய்திகள்தேசிய செய்திகள்மாவட்டம்உலகம்சிறப்பு கட்டுரைகள்சினிமா 360°
ஆரோக்கியமான வாழ்வு | பெண்கள் நலம்
அரசியல்அறிய வேண்டியவைதொழில்நுட்பம்விளையாட்டுஆன்மீகம்வணிகம்
Advertisement

கவனம்..! இன்று நடைபெற இருந்த பி.எட் கலந்தாய்வு கனமழை காரணமாக ஒத்தி வைப்பு...!

Today's B.Ed consultation has been postponed due to heavy rain
06:16 AM Oct 15, 2024 IST | Vignesh
Advertisement

சென்னை, லேடி வில்லிங்கடன் கல்வியியல் கல்லூரியில் இன்று நடைபெற இருந்த பி.எட் (தாவரவியல், விலங்கியல், வேதியியல், இயற்பியல்) மாணவர் சேர்க்கைகான கலந்தாய்வு கனமழை காரணமாக 21.10.2024 அன்று நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement

தென்கிழக்கு வங்கக் கடல் பகுதியில், குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாகியுள்ளது. இதனைத் தொடர்ந்து, வலுவான காற்றழுத்த தாழ்வுப் பகுதியாக அது வலுப்பெற்று மேற்கு - வடமேற்கு திசையில் நகர்ந்து புதுவை, வடதமிழகம், தெற்கு ஆந்திர கடற்கரை அருகில் நிலை கொள்ளும் என்றும் இதன் காரணமாக, அடுத்து வரும் 5 தினங்களுக்கு தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் மழை தொடரும் என்றும் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

பொதுமக்கள் மற்றும் மாணவர்களின் பாதுகாப்பு கருதி சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், கடலூர் மற்றும் செங்கல்பட்டு மாவட்டங்களில் உள்ள பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இதனிடையே, மழை காரணமாக கடலூர் மற்றும் விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள பள்ளிகளுக்கும் இன்று விடுமுறை அறிவித்து அந்தந்த மாவட்ட ஆட்சியர்கள் உத்தரவிட்டுள்ளனர்.

இந்த நிலையில் சென்னை, லேடி வில்லிங்கடன் கல்வியியல் கல்லூரியில் இன்று (15.10.2024) நடைபெற இருந்த பி.எட் (தாவரவியல், விலங்கியல், வேதியியல், இயற்பியல்) மாணவர் சேர்க்கைகான கலந்தாய்வு கனமழை காரணமாக 21.10.2024 (திங்கள் கிழமை) அன்று நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Tags :
B edrain
Advertisement
Next Article