For the best experience, open
https://m.1newsnation.com
on your mobile browser.
Advertisement

இன்று இடி மின்னலுடன் வெளுத்து வாங்கப்போகும் மழை..!! வானிலை ஆய்வு மையம் சொன்ன குட் நியூஸ்..!!

The Meteorological Department has said that there is a possibility of moderate rain with thunder and lightning in Kanchipuram and Chengalpattu districts.
09:14 AM Jun 19, 2024 IST | Chella
இன்று இடி மின்னலுடன் வெளுத்து வாங்கப்போகும் மழை     வானிலை ஆய்வு மையம் சொன்ன குட் நியூஸ்
Advertisement

காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களில் இடி மின்னலுடன் கூடிய மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

Advertisement

தென்னிந்திய பகுதிகளின் மேல் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக ஜூன் 19 முதல் 21ஆம் தேதி வரை தமிழ்நாட்டில் ஓரிரு இடங்களிலும், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்றும் ஜூன் 22ஆம் தேதி தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளிலும் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்லையில், அடுத்த அடுத்த மூன்று மணி நேரத்தில் காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களில் இடி மின்னலுடன் கூடிய மிதமான மழைக்கு வாய்ப்புள்ளது. சென்னை, புறநகர் பகுதிகளில் புதன்கிழமை வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும் நகரின் ஒருசில பகுதிகளில் மாலை, இரவு வேளையில் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

Read More : ரூ.500 கோடியில் சொகுசு பங்களா! ரூ.1 கோடி செலவில் நவீன கழிவறை!! மீண்டும் விஸ்வரூபம் எடுக்கும் ருஷிகொண்டா மாளிகை!!

Tags :
Advertisement