முக்கிய செய்திகள்தேசிய செய்திகள்மாவட்டம்உலகம்சிறப்பு கட்டுரைகள்சினிமா 360°
ஆரோக்கியமான வாழ்வு | பெண்கள் நலம்
அரசியல்அறிய வேண்டியவைதொழில்நுட்பம்விளையாட்டுஆன்மீகம்வணிகம்
Advertisement

இன்று புரட்டாசி பௌர்ணமி!. விரதம் இருந்து சிவனை வழிபடுங்கள்!. லட்சுமி கடாட்சம் வீடு தேடி வரும்!

Today Puratasi Poornami!. Fast and worship Shiva! Lakshmi Kataksam will come looking for a home!
07:57 AM Oct 17, 2024 IST | Kokila
Advertisement

Puratasi Pournami: புரட்டாசி மாத பௌர்ணமி நாளில் விரதமிருந்து மாலை சந்திர உதய நேரத்தில் நிலவையும் அம்பாளையும் தரிசனம் செய்ய வேண்டும். இந்த வழிபாட்டை செய்பவர்கள் நினைத்த காரியங்களிலும் வெற்றி பெறுவார்கள் என்பது நம்பிக்கை. இன்று (அக்டோபர் 17ம் தேதி) வியாழக்கிழமை புரட்டாசி பௌர்ணமி தினமாகும். இந்த நாளில் விரதம் இருந்து சிவ வழிபாடு செய்தால் முன்பிறவியில் செய்த பாவங்கள் நீங்கும். செல்வ வளம் பெருகும் லட்சுமி கடாட்சம் பெருகும்.

Advertisement

ஆடி முதல் மார்கழி வரை உள்ள தட்சிணாயணம் தேவர்களுக்கு இரவு காலம். இதில் புரட்டாசி மாதம் என்பது தேவர்களின் இரவு காலத்தின் நடுநிசியாகும். நடுநிசியான புரட்டாசி மாதத்தில் முழு நிலவு நாளான பெளர்ணமி என்பது அம்பிகையின் பிரகாசம் ஆகும். புரட்டாசி பௌர்ணமி தினத்தன்று தேவர்கள் அன்னையின் நாமத்தை ஜெபித்தபடியே தியானமும் தவமும் செய்து அன்னையின் அருளைப் பெறுவார்கள்.

பௌர்ணமி இரவின் நடுநிசியில் தியானம், ஜெபம், பூஜை, பிராணாயாமம், தவம் செய்தால் எதிர்காலத்தை உணர்ந்து கொள்ளும் இறைசக்தி கிடைக்கும் என்பது நம்பிக்கை. வீட்டில் விரதமிருந்து சிவபெருமானை வழிபடுவதாலும், அருகிலுள்ள சிவாலயங்களுக்குச் சென்று வில்வ அர்ச்சனை செய்து, நெய் தீபங்கள் ஏற்றிவைத்து வழிபடுவதால் தெய்வ அனுகிரகம் வீடு தேடி வரும்.

கிருச்சமதர் என்ற முனிவர் விநாயகப் பெருமானின் மிகச் சிறந்த பக்தர். அவர் விநாயகப் பெருமானை நோக்கி கடுந்தவம் இருந்தார். அவர் தவம் இருந்ததன் பலனாக விநாயகரை தரிசிக்கும் பெரும் பேறு பெற்றார். விநாயகரிடம் இருந்து பல வரங்களையும் பெற்றுக் கொண்டார். அந்த வரத்தில் ஒன்றுதான், சிவபெருமானைத் தவிர வேறு எவராலும் அழிக்க முடியாத ஒரு மகனை, தன்னுடைய சக்தியால் பெற்றார். தவசக்தியால் பெற்ற மகனின் பெயர் பலி. கிருச்சமதர் முனிவரைப் போலவே பலியும் விநாயகர் மீது அளவு கடந்த பக்தியைக் கொண்டான்.

பலியும் பிள்ளையாரை வழிபட்டு பல வரங்களைப் பெற்றான். அதில் மூன்று உலகங்களையும் அடக்கியாளும் வல்லமையை தனக்கு தந்தருள வேண்டும் என்ற வரத்தை பெற்றுக் கொண்டான். மேலும், அந்த வரங்களில் குறிப்பிடத்தக்கவை பொன், வெள்ளி மற்றும் இரும்பாலான மூன்று உலோக கோட்டையையும் கொடுத்து அருள் புரிந்தார். வரங்களை கொடுத்த பிள்ளையார் பலியை எச்சரிக்கை செய்தார், நான் வழங்கிய வரங்களைக் கொண்டு நீ தவறான பாதையில் சென்றால் சிவபெருமானின் திருக்கரத்தில் உள்ள கணை ஒன்றினால் உன்னுடைய கோட்டைகள் அழியும் என்றார்.

ஆனால் அதை பொருட்படுத்தாமல் அவற்றைக்கொண்டு மூவுலகங்களையும் துன்புறுத்தினான் பலி. அசுரனின் தொல்லைகளைப் பொறுக்க முடியாத தேவர்களும் முனிவர்களும் சிவ பெருமானை சரணடைந்தனர். தேவர்களுக்காக பலி உடன் போர்தொடுக்க முடிவெடுத்தார் சிவபெருமான். விநாயகர் அந்தணர் வேடமிட்டு பலியிடம் சென்று திருக்கயிலையில் இருக்கும் சிந்தாமணி விநாயகரின் திருவுருவத்தை எனக்கு எடுத்துத் தர வேண்டும் என்று கேட்டார். பலியும் அதற்கு சம்மதம் தெரிவித்து சிவபெருமானிடம் சென்றான். ஆனால் சிவபெருமான் விநாயகர் உருவத்தை தர மறுத்ததுடன், தன்னுடன் போர் புரிந்து அதை எடுத்துச் செல்லும்படி கூறினார். சிவபெருமானுக்கும், திரிபுரனுக்கும் போர் நடந்தது. போரின் முடிவில் கடும் சீற்றத்துடன் பலியின் மீது சிவ கணை பாய்ந்தது.

திரிபுரனாகிய பலி, சிவபெருமானின் பாதங்களில் கலந்து முக்தி பெற்றான். அசுரன் வதம் செய்யப்பட்ட தினம், புரட்டாசி மாத பௌர்ணமி நாளாகும். அந்த நாளை பாகுளி என்று அழைப்பார்கள். இந்தப் புண்ணிய திருநாளில் சிவ வழிபாடு செய்பவர்களைத் துன்பங்கள் நெருங்காது என்பது நம்பிக்கை. புரட்டாசி பௌர்ணமி தினத்தில் காலை நேரத்தில் சிவ வழிபாடு செய்தால், முற்பிறப்பில் செய்த பாவங்கள் நீங்கும்.

நண்பகலில் சிவ வழிபாடு செய்தால், முற்பிறப்பில் செய்த பாவங்கள் மட்டும் இல்லாமல், இந்தப் பிறவியில் செய்த பாவங்களும் நீங்கும். மாலை நேரத்தில் சிவனை வழிபாடு செய்தால், சிவபெருமானின் அருளால் ஏழேழு பிறவிகளில் செய்து முற்றிய பாவங்கள் அனைத்தும் நீங்குவதுடன், விரும்பிய எல்லா வேண்டுதல்களும் நிறைவேறும் என்பதே புரட்டாசி மாத பௌர்ணமி நாளின் சிறப்பாகும்.

Readmore: மூளை அலைகள் மூலம் இருவரை தொடர்புப்படுத்திய கனவுகள்!. அறிவியல் உலகில் பெரிய மைல்கல்!. விஞ்ஞானிகள் அசத்தல்!

Tags :
Fast and worship ShivaPuratasi Pournami
Advertisement
Next Article