”இன்று வட தமிழகம் அதிரப்போகுது”..!! வெதர்மேன் சொன்ன குட் நியூஸ்..!!
தமிழ்நாட்டில் கடந்த சில நாட்களாக பரவலாக மழை பெய்து வந்த நிலையில், இன்று எங்கெல்லாம் மழை பெய்யும் என்பது குறித்து வெதர்மேன் பிரதீப் ஜான் சில முக்கிய தகவல்களைப் பகிர்ந்துள்ளார்.
தமிழ்நாட்டில் கடந்த சில மாதங்களாகவே கோடை வெயில் மிகக் கொடூரமாக வாட்டி வதைத்தது. இதனால் மதிய நேரங்களில் பொதுமக்களால் வெளியே கூட செல்ல முடியாத சூழல் நிலவியது. ஆனால், ஜூன் 1ஆம் தேதி முதலே பரவலாக மழை பெய்யத் தொடங்கியது. மாநிலத்தில் பல்வேறு இடங்களிலும் மழை பெய்து வரும் நிலையில், வெப்பம் தணிந்துள்ளது. இதற்கிடையே, இன்று எங்கெல்லாம் மழை பெய்யும் என்பது குறித்து வெதர்மேன் பிரதீப் ஜான் சில முக்கிய தகவல்களைப் பகிர்ந்துள்ளார்.
இன்றைய தினம் வட தமிழகப் பகுதிகளில் நல்ல மழை இருக்கும் என்று தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் தனது எக்ஸ் பக்கத்தில், "(இன்று) மாலை/இரவில் சென்னை மற்றும் சுற்றுப்புறங்களான கேடிசிசி (காஞ்சிபுரம், திருவள்ளூர், சென்னை, செங்கல்பட்டு), வேலூர், ராணிப்பேட்டை, திருவண்ணாமலை, கடலூர், விழுப்புரம், சேலம், தருமபுரி, கிருஷ்ணகிரி, திருப்பத்தூர், ஈரோடு போன்ற பகுதிகளில் இடியுடன் கூடிய செம மழை பெய்யும். எளிமையாகச் சொல்ல வேண்டும் என்றால் வட தமிழகம் (இன்று) அதிரும்" என்று பதிவிட்டுள்ளார்.
மேலும், இவை தண்டர்ஸ்டாம் காரணமாகப் பெய்யும் மழை என்பதால் ஒவ்வொரு இடத்திலும் ஒவ்வொரு அளவில் மழை பெய்யும் என்று தெரிவித்துள்ளார். கடந்த சில வாரங்களாகவே அதீத வெப்பம் காரணமாக வடதமிழக மக்கள் அவதிப்பட்டு வந்த நிலையில், அதற்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் இந்த மழை இருக்கும் என்று பொதுமக்கள் எதிர்பார்க்கிறார்கள்.
Read More : காதுகளுக்கு பட்ஸ் பயன்படுத்துறீங்களா..? மோசமான விளைவுகளை சந்திக்க நேரிடும்..!!