இன்றுடன் 10 ஆண்டுகள் நிறைவு!. பிரதமர் மோடியின் ‛மான்கி பாத்’ நிகழ்ச்சி சாதனை!.
``Monkey Baat'': பிரதமர் மோடியின் மான்கி பாத் நிகழ்ச்சி 10 -ம் ஆண்டை நிறைவு செய்தது. இன்று 114-வது மான்கிபாத் நிகழ்ச்சியுடன் 11-வது ஆண்டில் பிரதமர் மோடி இன்று உரையாற்றவுள்ளார்.
ரேடியோ வாயிலாக பிரதமரின் மான்கிபாத் நிகழ்ச்சி கடந்த 2014-ம் ஆண்டு அக்.03ம் தேதி துவக்கப்பட்டது. இதையடுத்து ஒவ்வொரு மாதம் கடைசி ஞாயிற்றுக்கிழமை ‛மான்கி பாத்' நிகழ்ச்சி மூலம் பிரதமர் மோடி மக்களுடன் உரையாடி வருகிறார்.பிரதமர் மோடி உலகளாவிய ஒரு தலைவராக உள்ளார். அவரது பணியை சர்வதேச நாடுகள் பாராட்டுகின்றன. இதையடுத்து 2-வது முறையாக பா.ஜ. ஆட்சிக்கு வந்த பின்னரும் இந்நிகழ்ச்சியில் சமூக மற்றும் மக்கள் நலன் சார்ந்த பல்வேறு விவகாரங்கள் குறித்து அவர் பேசி வருகிறார்.
கடந்த 2023-ம் ஆண்டு மார்ச் மாதம் பிரதமர் மோடியின் 100-வது மன் கி பாத் நிகழ்ச்சி ஏப்.30-ம்தேதி உலகம் முழுதும் ஒலிபரப்பு செய்யப்பட்டது. இந்நிலையில் 3-வது முறையாக பா.ஜ., ஆட்சி வந்த நிலையில் இடைவிடாமல் தொடர்ந்து ஒலிபரப்பாகி 10 ஆண்டை நிறைவு செய்து சாதனை படைத்துள்ளது. இன்று (அக்.27) 114 வது மான்கி பாத் நிகழ்ச்சி ஒலிபரப்பாகிறது. இதில் கடந்த 10 ஆண்டுகளில் நாட்டின் வளர்ச்சி, உள்ளிட்ட பல்வேறு விஷயங்கள் குறித்து பிரதமர் மோடி மக்களுடன் கலந்துரையாடுகிறார்.