முக்கிய செய்திகள்தேசிய செய்திகள்மாவட்டம்உலகம்சிறப்பு கட்டுரைகள்சினிமா 360°
ஆரோக்கியமான வாழ்வு | பெண்கள் நலம்
அரசியல்அறிய வேண்டியவைதொழில்நுட்பம்விளையாட்டுஆன்மீகம்வணிகம்
Advertisement

Puppet Show: இன்று உலக பொம்மலாட்ட தினம்!… அழிவின் பிடியில் இருந்து மீட்க அனைவரும் கைகோர்ப்போம்!

06:17 AM Mar 21, 2024 IST | 1newsnationuser3
Advertisement

அழிவின் விளிம்பில் இருக்கும் இக்கலையை பாதுகாப்பதும், அதை நினைவு கூறவும் மற்றும் இக்கலையை ஊக்குவிக்கும் விதமாக உலகம் முழுவதும் பொம்மலாட்ட தினம் இன்று (மார்ச் 21) கடைபிடிக்கப்படுகிறது.

Advertisement

பழமையான மரபுவழிக் கலைகளில் ஒன்றான பொம்மலாட்டம் என்பது திரைக்குப் பின்னால் இருந்து பொம்மைகளில் நூலைக்கட்டி கதைச் சொல்வதாகும். இந்தக் கலை நாட்டுப்புறங்களில் முக்கிய தொடர் பாடல் கருவியாகவே விளங்கியது. பொம்மலாட்டம் 'கூத்து' வகையைச் சேர்ந்தது. மரப்பாவைக்கூத்து, பாவைக்கூத்து என்ற பெயர்களாலும் இக்கலை அழைக்கப்படுகிறது.

நூல் பொம்மை, கோள் பொம்மை, நிழல் பொம்மை, கைபொம்மை, விரல் பொம்மை என்றும், தோற்றத்தின்படி இருகோண, முக்கோண வடிவத்தில் நிர்மாணிக்கப்படும். பொம்மலாட்டத்தில் மொத்தமாக 9 கலைஞர்கள் பங்கேற்பார்கள். இவர்களில் 4 கலைஞர்கள் பொம்மைகளை இயக்குவார்கள். 4 கலைஞர்கள் இசைக்கலைஞர்களாக இருப்பார்கள். ஒருவர் உதவியாளராக இருப்பார். ஆர்மோனியம், தபேலா, மிருதங்கம், ஜால்ரா, முகவீணை ஆகிய இசைக்கருவிகள் இக்கலை நிகழ்த்தலுக்குப் பயன்படுத்தப்படும். தற்போது சிலர் மின் இசைக்கருவிகளைப் பயன்படுத்துகிறார்கள். 4 மீட்டர் அகலம், 6 மீட்டர் நீளம், 3 மீட்டர் உயரம் கொண்ட மூன்று புறங்கள் அடைக்கப்பட்ட அரங்கில் மரபுரீதியாக இந்தக் கலை நிகழ்த்தப்படுகிறது.

தமிழ் பாரம்பரியத்துக்கும், கலாசாரத்துக்கும் என்றுமே தனித்தனி அடையாளங்கள் உண்டு. அந்த அடையாளங்களில் ஒன்றாக பொம்மலாட்டம் திகழ்கிறது. இது கூத்து வகையை சேர்ந்தது. மரத்தால் செய்யப்பட்ட பொம்மைகளில் நூலை கட்டி திரைக்கு பின்னால் இருந்து இயக்கியபடி கதை சொல்லும் கலைதான் பொம்மலாட்டம். இது பாவைக்கூத்து, மரப்பாவைக்கூத்து என்றும் அழைக்கப்படுகிறது. மேலும் தோல் பொம்மலாட்டம், மர பொம்மலாட்டம் என்ற 2 வகைகளில் நிகழ்த்தப்படுகிறது. பெரும்பாலும் பொம்மலாட்டத்தில் இதிகாசமும், புராண கதைகளும், சரித்திர கதைகளுமே அதிகம் நிகழ்த்தப்படும். குறிப்பாக தமிழகத்தில் அருணகிரி நாதர் வரலாறு, சிறுத்தொண்ட நாயனார் கதை, சீதா கல்யாணம், பக்த பிரகலாதன், ஆண்டாள் கல்யாணம், அரிச்சந்திரன் கதை, வள்ளி திருமணம் ஆகியன நிகழ்த்தப்படுகிறது.

இதில் பயன்படுத்தப்படும் பொம்மைகளை கல்யாண முருங்கை மரத்தில் இருந்துதான் உருவாக்குகிறார்கள். அந்த மரத்தின் கட்டைகளை நீரில் ஊற வைத்து, அதன்பின் உலர வைத்து தலை, கால், கை என்று பாகங்களை தனித்தனியாக செதுக்குவார்கள். பின்னர் மீண்டும் நன்றாக உலர வைத்து பாகங்களை இணைப்பார்கள். எனினும் அவை தனித்தனியாக இயங்கும் வகையில் இருக்கும். இந்த பொம்மைகள் 45 சென்டி மீட்டர் முதல் 90 சென்டி மீட்டர் வரை உயரம் கொண்டதாக இருக்கும். பொம்மையின் பாகங்களுக்கு ஏற்பவும், கதாபாத்திரங்களின் தன்மைக்கு ஏற்பவும் வர்ணம் தீட்டுவார்கள். ஆரம்ப காலங்களில் அனைத்து பொம்மைகளுக்கும் மஞ்சள் வர்ணம் மட்டுமே தீட்டப்பட்டது. தற்போதய காலக்கட்டத்தில் கற்பனைக்கும், வசீகரத்துக்கும் ஏற்ப பல வர்ணங்கள் தீட்டப்படுகின்றன. மேலும் கதைகளுக்கு ஏற்ப பொம்மைகளுக்கு உடைகள் அணிவிக்கப் படுகிறது.

தமிழ்நாட்டில் பொம்மலாட்டம், ஆந்திராவில் கொய்யா பொம்மலாட்டா, கர்நாடகத்தில் சூத்ரதா கொம்பயேட்டா, ஒரிசாவில் கோபலீலா, மேற்கு வங்கத்தில் சுத்தோர் புதூல், அசாமில் புதலா நாச், ராஜஸ்தானில் காத்புட்லி , மகாராஷ்டிரத்தில் காலாசூத்ரி பஹுல்யா எனவும் இந்த கலை அழைக்கப்படுகின்றது. ஆனால் அந்த கலையை நிகழ்த்துபவர்களின் எண்ணிக்கையும், விரும்புபவர்களின் எண்ணிக்கையும் குறைந்து வருவது வருத்தமே. எனவே பாரம்பரிய கலைகளில் ஒன்றான பொம்மலாட்டத்தை அழிவின் பிடியில் இருந்து மீட்க அனைவரும் கைகோர்க்க வேண்டும்.

Tags :
இன்று உலக பொம்மலாட்ட தினம்
Advertisement
Next Article