For the best experience, open
https://m.1newsnation.com
on your mobile browser.
Advertisement

இன்று உலக இதய தினம் 2024!. உங்கள் இதயத்தை ஆரோக்கியமாக வைத்திருக்க டிப்ஸ்!

Today is World Heart Day 2024!. Tips to keep your heart healthy!
07:28 AM Sep 29, 2024 IST | Kokila
இன்று உலக இதய தினம் 2024   உங்கள் இதயத்தை ஆரோக்கியமாக வைத்திருக்க டிப்ஸ்
Advertisement

World Heart Day 2024: உலக இதய தினம், ஒவ்வொரு ஆண்டும் செப்டம்பர் 29 அன்று அனுசரிக்கப்படுகிறது, இது இதய ஆரோக்கியத்தின் முக்கியத்துவத்தைப் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளது. 1999 ஆம் ஆண்டு உலக இதய சம்மேளனத்தால் (WHF) உலக சுகாதார அமைப்பின் (WHO) இணைந்து நிறுவப்பட்டது. அந்தவகையில் இந்த ஆண்டு, இருதய நோய் அபாயங்கள் மற்றும் விளைவுகள் குறித்து தனிநபர்களுக்குக் கற்பிக்கும் விழிப்புணர்வாகும்.

Advertisement

உலக இதய தினம், 1997 முதல் 1999 வரை WHF தலைவராக பணியாற்றிய அன்டோனி பேய்ஸ் டி லூனாவால் ஈர்க்கப்பட்டது. இது முதலில் 1999 இல் நிறுவப்பட்டாலும், முதல் கொண்டாட்டம் செப்டம்பர் 24, 2000 வரை நடைபெறவில்லை. உலக இதய சம்மேளனத்தின் கூற்றுப்படி, இருதய நோய் ஒவ்வொரு ஆண்டும் 20.5 மில்லியனுக்கும் அதிகமான மக்களை பலியாக்குகிறது, மேலும் இந்த நபர்களில் பெரும்பாலோர் குறைந்த அல்லது நடுத்தர வருமான நாடுகளைச் சேர்ந்தவர்கள் என்றும் WHF இன் முதன்மை இலக்கு இந்த எண்ணிக்கையைக் குறைப்பதாகும் என்றும் கூறப்பட்டுள்ளது. ஏனெனில் 80% இறப்புகள் தவிர்க்கப்படலாம் என்று நிபுணர்கள் நம்புகிறார்கள்.

இந்த உலக இதய தினத்தில், அனைவரும் தங்கள் இதயங்களையும் ஒட்டுமொத்த நல்வாழ்வையும் கவனித்துக்கொள்வதை நினைவூட்டும் சில எளிய வழிமுறைகள் மற்றும் இன்றைய வாழ்க்கை சூழ்நிலையில், நமது இதயத்தை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ள தினமும் நாம் பின்பற்ற நாம் என்ன செய்யவேண்டும் என்பது குறித்து இந்த தொகுப்பில் பார்க்கலாம்.

தினமும் அரை மணி நேரம் உடற்பயிற்சி செய்வது, ஆரோக்கியமான உணவுகளை சாப்பிடுவது, நம்முடைய மனதை மகிழ்ச்சியாக வைத்து கொள்வது, தினமும் ஆறு முதல் எட்டு மணி நேரம் உறங்குவது முக்கியம். மது அருந்துததல், புகைப்பிடித்தல், அல்லது பாக்கெட்டில் வரும் நொறுக்குத் தீனிகளை சாப்பிடுவது போன்றவற்றை தவிர்க்கவேண்டும். குறிப்பிட்ட கால இடைவெளியில், உடலின் ரத்த அழுத்தம், எடை, சர்க்கரை அளவு ஆகியவற்றை பரிசோதிக்க வேண்டும்.

இரவில் பணி செய்பவர்களில் இதய துடிப்பு 20 முதல் 25 சதவீதம் சீராக இல்லை என்று பல ஆய்வுகள் கண்டறிந்துள்ளன. அதே போல், ரத்த குழாய் அடைப்பு, மாரடைப்பு போன்ற இதயம் தொடர்பான நோய்கள், பகலில் பணி செய்பவர்களை விட இவர்களுக்கு அதிகம் ஏற்படுவது தெரியவந்துள்ளது. குறிப்பாக, பெண்களுக்கு இது போன்ற பிரச்னைகள் ஏற்படுகின்றன. இதைத் தவிர்க்க, வெளிச்சம் இல்லாத அறையில் 8 மணி நேரம் வரை நன்றாக உறங்க வேண்டும். அவர்கள் நேரம் கிடைக்கும்போது அல்லது வேலைக்கு செல்வதற்கு முன், உடற்பயிற்சி செய்வதை பழக்கமாக்கிக்கொள்ள வேண்டும்.

மேலும் சில பணிகள் குறிப்பிட்ட நேர வரையறை இல்லாமல் இருக்கலாம். அவர்களும், முடிந்த அளவுக்கு, போதுமான தூக்கம், அரை மணி நேரம் உடற்பயிற்சி, ஆரோக்கியமான உணவு பழக்கம் ஆகியவற்றைப் பின்பற்றுவது இதய நோய்களில் இருந்து காக்கும். சமீபத்தில் 30 வயதில் இருப்பவர்கள் இதய நோய்களுக்கு அதிகம் ஆளாகிறார்கள். இந்த வயதில் எதையெல்லாம் ஒருவர் கவனத்தில் கொள்ள வேண்டும்?

புகைப்பிடிப்பது இதய நோய்கள் ஏற்பட ஒரு முக்கிய காரணம். அடுத்து, இப்போது பலரும் உட்கார்ந்தே செய்யும் பணிகளில் இருக்கின்றனர். இதனால் உடல் இயங்க வாய்ப்பு குறைந்துவிடுகிறது. இந்த இரண்டையும் தவிர்த்தாலே, இதய நோயிலிருந்து பெரிதும் தப்பிக்கலாம். ன அழுத்தம் இருக்கும்போது, நமது உடலில் கேட்டிகோலமைன் (catecholamines) அதிகம் சுரக்கும். இது இதய துடிப்பை, ரத்த அழுத்ததை அதிகப்படுத்தும் வாய்ப்புள்ளது. இதுவும் இதய நோய்க்கு இட்டு செல்லும்.

நம் மனத்தை அமைதியாக வைத்துக்கொள்ளப் பழக வேண்டும். நேர்மறையாக இருக்க கற்று கொள்வது, நண்பர்கள், குடும்பத்தினருடன் மனம் விட்டு பேசுவது, அதிகம் சமூக ஊடகம் பயன்படுத்தாமல், அலை பேசியைப் பயன்படுத்தாமல் இருப்பது, யோகா, தியானம் போன்ற பயிற்சிகள் செய்வது என நம்மை நாமே அவ்வப்போது புதுப்பித்துக் கொள்ள வேண்டும்.

பெண்களுக்கு மாதவிடாய் நிற்கும் வரை ஈஸ்ட்ரோஜன் இயல்பாக சுரக்கும். இதனால், 40, 45 வயது வரை அவர்களுக்கு இதய நோய்கள் ஏற்படுவது குறைவாக இருக்கும். ஆனால், மாதவிடாய் நின்றதும், ஆண்களுக்கு இணையாக அவர்களுக்கும் இதய நோய் வாய்ப்புகள் அதிகரிக்கும். இந்த வயதில், மூச்சு விடுவதில் சிரமம், நெஞ்சு வலி, படபடப்பு போன்ற அறிகுறிகள் இருந்தால், உடனடியாக மருத்துவரை அணுகுவது நல்லது.

Readmore: பலத்த எதிர்பார்ப்பு!. பூமிக்கு திரும்புவாரா சுனிதா வில்லியம்ஸ்?. விண்வெளிக்கு சென்ற SpaceX!

Tags :
Advertisement