இன்று உலக நீரிழிவு நோய் தினம்!… சர்க்கரை நோயால் அவதியா?… புண்களை சரிசெய்யும் முறை!
இன்று உலகம் முழுவதும் உலக நீரிழிவு தினம் அனுசரிக்கப்படுகிறது. ஒவ்வொரு ஆண்டும் நவம்பர் 14ம் தேதியை உலக நீரிழிவு தடுப்பு தினமாக ஐநா சபை அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. கடந்த 1991 ஆம் ஆண்டு முதல் ஒவ்வொரு ஆண்டும் நவம்பர் 14ம் தேதி உலக நீரிழிவு தினம் அனுசரிக்கப்பட்டு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது
சர்க்கரை நோய் கட்டுக்குள் இருக்கும் வரை உடல் உறுப்புகளும் சிக்கலில்லாமல் இருக்கும். அதற்கு உணவு முறை, வாழ்க்கை முறை, சீரான இடைவெளியில் பரிசோதனை, சரியான அளவு மருந்துகள் என எல்லாமே அவசியம். இதில் ஒன்றில் கட்டுபாடு இல்லாவிட்டாலும் இரத்த சர்க்கரை அளவு அதிகரித்துவிடும். அப்போது பாதிக்கும் உடல் உறுப்புகளில் தோல் பிரச்சனையும் ஒன்று. இந்த தோல் பிரச்சனையை தவிர்க்க என்னவெல்லாம் செய்யலாம் என்பதை அறிந்துகொள்வோம்.
நரம்பியல் என்னும் நீரிழிவு பாதிப்பு இருந்தால் வெட்டு, கீறல் அல்லது சருமத்தில் துளையிடலாம். அவை முதலில் தெரியாது. ஆனால் சிறிய பிரச்சனை பெரியதாக மாறலாம். சர்க்கரை நோய் இருப்பவர்கள்எப்போதும் உடலை பற்றி எச்சரிக்கையாக இருங்கள். கால்கள், கணுக்கால்கள், பாதங்கள் மற்றும் கால்விரல்களுக்கு இடையில் புதிய காயங்கள். பழைய காயங்கள் குணமடைந்துள்ளதா என்று பரிசோதியுங்கள். காயங்கள் மற்றும் புண்களுக்கு சிகிச்சையளிக்க அலட்சியம் வேண்டாம். சிறிய வெட்டு, கீறல் என்பது கவலையடையவே செய்யும் என்பதால் மருத்துவரை அணுகுங்கள்.
தோல் பிரச்சனைகளில் காயங்கள் உண்டாகும் போதும் அதை அப்படியே விடாமல் வெதுவெதுப்பான நீரை கொண்டு சுத்தம் செய்யுங்கள். தோலில் எரிச்சல் இருக்கும். எனினும் தோலை உலரவைத்து துணி கட்டு போட்டு அந்த இடத்தில் கிருமி தாக்காமல் வைத்திருங்கள். ஒவ்வொரு நாளும் இதே போன்று காயம் பட்ட இடத்தை சுத்தம் செய்து கட்டுகளை மாற்றிவிடுங்கள். காயம் ஆறும் வரை அப்படியே செய்யுங்கள்.
சர்க்கரை நோயாளிகளுக்கு கொப்புளம் வந்தால் உடைக்கவோ அல்லது வெடிக்கவோ முயற்சிக்காதீர்கள். இது தோல் தொற்றுநொயிலிருந்து பாதுகாக்கிறது. அந்த இடத்தில் சோப்பு மற்றும் வெதுவெதுப்பான நீரைக்கொண்டு அந்த பகுதியை சுத்தம் செய்து கொப்புளத்துக்கு பாக்டீரியா எதிர்ப்பு களிம்பு தடவவும். பிறகு துணி கொண்டு மூடி விடவும். ஒவ்வொரு நாளும் கட்டுகளை மாற்றவும்.
தீக்காயங்கள் ஏற்பட்டால் சுத்தமான ஓடும் நீரை கொண்டு அப்பகுதியை ஆற்றவும். கொப்புளங்களை உடைக்க அல்லது பாப் செய்ய முயற்சிக்க வேண்டும். அப்படி செய்தால் அது கிருமித்தொற்று ஏற்படுவதற்கான வாய்ப்புகள் அதிகம் உண்டு. மிதமான சோப்பு மற்றும் வெதுவெதுப்பான நீரில் கழுவி உலரவைக்கவும். தீக்காயமே என்றாலும் துணி திண்டு கொண்டு மூடிவிடலாம். ஒவ்வொரு நாளும் கட்டுகளை மாற்றுங்கள். காயம் அதிகமாக இருந்தால் நீங்களாக சுய மருத்துவம் செய்யாமல் மருத்துவரை அணுகுங்கள்.